என் மலர்tooltip icon

    ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதை போன்று, அந்நாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யவும் தடை விதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பைடன் விவாதிப்பார் என தெரிகிறது. இதேபோல் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள உச்சி மாநாட்டிலும் ரஷியா மீதான தடை குறித்து அறிவிக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×