search icon
என் மலர்tooltip icon

    G-20 மாநாட்டில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    G-20 மாநாட்டில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடனான சந்திப்பிற்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். பெர்லினில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சந்திப்பு குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும், காத்திருங்கள் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ஜி-7 மற்றும் நேட்டோ உச்சி மாநாட்டில் ரஷியா மீது கூடுதல் தடைகளை விதிப்பது குறித்த திட்டங்களை அமெரிக்கா முன்வைக்க உள்ளதாகவும், இது உக்ரைன் மீதான எங்கள் ஆதரவை கூட்டாக நிரூபிக்கும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×