என் மலர்
உக்ரைனில் ஆண்டுக்கணக்கில் போர் நீடிக்கும் என்று ... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனில் ஆண்டுக்கணக்கில் போர் நீடிக்கும் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் எச்சரித்துள்ளார். இந்த போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க மேற்கு நாடுகள் தயாராக வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெற்கு பகுதியில் உள்ள முள்களப் படைகளை இன்று முதல் முறையாக பார்வையிட்டார். அப்போது, நாட்டின் தெற்கு பகுதியை ரஷியாவிடம் தனது படைகள் விட்டுக்கொடுக்காது என்று சபதம் செய்த நிலையில், நேட்டோ பொதுச்செயலாளர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கிழக்குப் பகுதியில் ரஷியப் படைகளின் புதிய தாக்குதல்களை முறியடித்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
Next Story






