என் மலர்
உக்ரைன், மால்டோவா, ஜார்ஜியா போன்ற அண்டை நாடுகளின்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன், மால்டோவா, ஜார்ஜியா போன்ற அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது மட்டும் தீர்வாக இருக்க முடியாது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். மால்டோவா தலைநகரில் அந்நாட்டு அதிபர் மியா சாண்டுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளில் ஒத்துழைக்க ஒரு பரந்த ஐரோப்பிய அரசியல் சமூகத்தை உருவாக்குவது முக்கியம் என்று தெரிவித்துள்ளார். உக்ரைன், மால்டோவா மற்றும் ஜார்ஜியாவின் மனுக்கள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஜூன் மாத இறுதியில் பிரஸ்ஸல்ஸில் கூடுவார்கள் என்றும் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதே தமது பணி என்றும் மேக்ரான் குறிப்பிட்டார்.
Next Story






