என் மலர்
உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் பிரிட்ஜெட் பிரிங்க்,... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் பிரிட்ஜெட் பிரிங்க், உக்ரைன் அரசின் இணையப் பாதுகாப்பு நிறுவனத்திற்குச் சென்று ரஷிய ஹேக்கர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான பணிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். உக்ரைன் உடன் சிறப்புத் தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு சேவைக்காக, அமெரிக்க உயர்மட்ட தூதரக அதிகாரியாக பிரிங்க் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இந்த சந்திப்பில் பங்கேற்றார். உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்புக்கு பிறகு, உக்ரைன் அரசு நிறுவனங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஆபரேட்டர்களுடன் அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களை இணைப்பது தொடர்பான திட்டதில் அமெரிக்க தகவல் பாதுகாப்பு சேவை நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
Next Story






