என் மலர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்று... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். அப்போது, " ஹமாஸ் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், 31 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் பிணைக் கைதிகளாக பொது மக்களையும், குழந்தைகளையும் கூட வைத்துள்ளனர். இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும். இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் " என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த சூழலிலும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்தததற்கு இஸ்ரேல் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா தற்போது உற்றநண்பனாக துணை நிற்கிறது" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.
Next Story






