search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அதிகபட்சம் 165 கிமீ ரேன்ஜ் - ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
    X

    அதிகபட்சம் 165 கிமீ ரேன்ஜ் - ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா பிராண்டிங்கில் மொத்தம் மூன்று மாடல்களாக அறிமுகமாகி உள்ளன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் விடா V1 என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் கழற்றக்கூடிய வகையில் இரண்டு பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.

    புதிய ஹீரோ விடா V1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 143 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. ப்ரோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. V1 பிளஸ் மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும் ப்ரோ மாடல் 3.2 நொடிகளிலும் எட்டிவிடும்.

    அம்சங்களை பொருத்தவரை ஹீரோ விடா V1 மாடலில் எல்இடி இலுமினேஷன், 7 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, குரூயிஸ் கண்ட்ரோல், 2 வழி திராட்டில், கீலெஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, எஸ்ஒஎஸ் அலர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்ப்லிட் சீட் செட்டப், டெலிஸ்கோபிக் முன்புற போர்க், பின்புறம் சிங்கில் ஷாக், சிங்கில் டிஸ்க் பிரேக் உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஹீரோ விடா V1 பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் என்றும் V1 ப்ரோ மாடல் விலை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரை வாங்குவோர் லீஸ் மற்றும் பைபேக் ஆப்ஷன்களில் பயன்பெறலாம்.

    Next Story
    ×