என் மலர்tooltip icon

    கன்னி

    வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை

    6.7.2025 முதல் 12.7.2025 வரை

    விருப்பங்கள் நிறைவேறும் வாரம். 10-ம்மிடமான ஜீவன ஸ்தானத்தில் சூரியனும், குருவும் சேர்ந்து சிவராஜ யோகத்தை ஏற்படுத்துவதால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நடக்கும். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். எந்திர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவீர்கள்.

    பொருளாதார வளம் சிறக்கும். ஆன்லைன், பங்கு சந்தை வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். சுபச் ெசலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். பெற்றோரகளின் நல் ஆசிகளைப் பெறுவீர்கள். விரும்பிய வங்கி கடன் இந்த வாரத்தில் கிடைக்கும்.

    பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் ஏற்பட்ட கவலை குறையும். திருமணத்தடை அகலும். வீடு, வாகன யோகம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை, சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் அகலும். மொத்தத்தில் சங்கடங்கள் விலகி சாதகமான முன்னேற்றம் ஏற்படும். பவுர்ணமி அன்று சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×