என் மலர்
கன்னி
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
வீண் விரயங்களை தவிர்க்க வேண்டிய வாரம்.ராசிக்கு சனி, செவ்வாய் சம்பந்தம் உள்ளது. ராசி அதிபதி புதன் விரய ஸ்தானத்தில் விரைய அதிபதி சூரியனுடன் இணைந்துள்ளார்.பணிச்சுமை அதிகரிக்கும். தாய்மாமாவிற்கும், தம்பிக்கும் ஏற்பட்ட மோதலில் பழிச் சொல் உங்கள் பக்கம் திரும்பும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் குணமடைந்து இயல்பு நிலை திரும்புவார்கள். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு.
புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும்.உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு உண்டு. பதவி உயர்வின் மூலம் பல நல்ல பயன்களை அடைவீர்கள். விரும்பிய கடன் தொகை கிடைக்கும் புதிய வீடு வாங்கலாம், அல்லது மாறலாம். வீடு, வாகனம் தொடர்பான கடன் முயற்சிகள் சாதகமாகும்.வீட்டில் சுபமங்கள நிகழ்வுகள் விமரிசையாக நடக்கும். அழுகை உனது வாழ்க்கை அல்ல.
துணிச்சலே உனது சக்தி என்று உணர்ந்து செயல்பட்டால் அச்சம் சாம்பலாகும்.பிரதோஷ நாட்களில் நந்திகேஸ்வரருக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபட்டால் ஆன்ம பலம் பெருகும். துன்பங்கள் நீங்கி நல்ல ஆற்றல்கள் பெருகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






