என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
வார ராசி பலன்கள்
4-7-2022 முதல் 10-7-2022 வரை
மனக்கசப்புகள் மாறும் வாரம். 2,9-ம் அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும். பொருளாதாரத்தில் தன் நிறைவு ஏற்படும். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும்.பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்துவாழும் கணவன், மனைவிமீண்டும் சேர்ந்து வாழ்வர்.குடும்பத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். மாணவர்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பார்கள்.
விரய அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் ராசி, பத்தாம் அதிபதி புதனுடன்இணைவதால் தொழில் நெருக்கடி இருக்கும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும். எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது.வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். குழந்தை வடிவில் உள்ள கிருஷ்ணரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசி பலன்கள்
27-6-2022 முதல் 03-7-2022 வரை
பொருளாதார தேவைகள் நிறைவு பெறும் வாரம். ராசி அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியஅதிபதி சுக்ரனுடன் சேர்க்கை பெறுவதால் தந்தையுடன் ஏற்பட்ட பிணக்குகள் விலகும். புத்திர பிராப்தம் கிட்டும். தந்தையிடம் இருந்து பெரிய பொருள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு கணவரிடம் இருந்துஎதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும்.
சிலர் மைத்துனருடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். அடமானத்தில் இருந்த வீடு, வாகனம், நிலபுலன் ,நகை அனைத்தும் மீண்டு வரும். 8-ம்மிட ராகுவினால் ஏற்பட்டஅவமானம், கடனால் கவலை, கணவன்- மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சினை கள் முற்றிலும் நீங்கும்.
தீராத நோயில் இருந்து முழு நிவாரணம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராததன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி உறவு மகிழ்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்ச மும் அதிகரிக்கும். திருமணத் தடை அகலும்.
அடிமட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் உயர உதவ வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை
பணத்தேவைகள் பூர்த்தியாகும் வாரம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் தனித்திறமையால் எளிதில் செய்ய முடியாத செயல்களைக் கூட செய்து சாதனை படைப்பீர்கள். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து அனுகூலமான பதில் வரும். பெண்களுக்கு மாமியார் மாமனாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உற்றார் உறவுகளுக்கு உதவுவீர்கள்.சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும். சிலருக்கு வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு.
அரசியல் மற்றும் பொது ஜன தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்மைகள் சேரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். ராசியை குரு அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்து பார்ப்பதால் முன் யோசனை இல்லாத செயல்களால்கிடைக்க வேண்டிய நல்ல சந்தர்ப்பங்கள் தவறலாம்.
23.6.2022 காலை 6.15 முதல் 25.6.2021 மாலை 5.02வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொள்கை பிடிப்பை தளர்த்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்குகதம்ப மாலை சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை
தர்மம் தலை காக்கும் நேரம்.ராசி அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பழைய கவுரவத்தை நிலை நிறுத்திக் கொள்வீர்கள். உங்களின் தனித் திறமையால் சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் வாய்ப்பு அமையும். தொழிலில் கிடைக்கும் லாபம் வியாபாரிகளின் முகத்தில் மகிழ்ச்சியைத் தரும்.
குலத் தொழிலில் இருப்பவர்கள் தந்தையின்ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாகும். சிலருக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். திருமணத்திற்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்ததொகை கைக்கு கிடைக்கும். சுற்றமும், நட்பும் நிறைந்த சூழலில் கோலாகலமாக திருமணம் நடைபெறும். இந்த வாரத்தில் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். 8 மிட ராகுவால் கணவரால் மனைவிக்கு, மனைவியால் கணவருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம்.
பெண்கள் வீட்டிற்கு தேவையான சில முக்கிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அசைவ உணவு பிரியர்கள் பலர் தூய சைவ உணவிற்கு மாறுவார்கள்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசி பலன்கள்
6.6.2022 முதல் 12.6.2022 வரை
நினைப்பதொன்று, நடப்பதொன்றுமாக இருந்த நிலை மாறும். ஆரோக்கியத் தொல்லை அகலும். சில்லரை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு தொழிலில் இயல்பு நிலை நீடிக்கும். பெரும் முதலீட்டாளர்கள் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஆர்டர்களை டெலிவரி செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் முன்னர் வேலை பார்த்து விலகிய வேலைக்கே மீண்டும் செல்வார்கள்.
ராசி அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனுடன் சஞ்சரிப்பதால் தந்தை, தந்தை வழி உறவுகளுக்காக சில விரயங்களை சந்திக்க நேரும். தர்ம ஸ்தாபனம், அறக்கட்டளைகள் நடத்துபவர்களுக்கு தாராளமான நிதி உதவி கிடைக்கும். சிலர் பூர்வீக வீட்டை பழுதுபார்ப்பார்கள் அல்லது பூர்வீக நிலத்தை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்துவார்கள்.
அஷ்டமாதிபதி செவ்வாய் களத்திர ஸ்தான அதிபதியுடன் சேர்க்கை பெறுவதால் தம்பதிகளுக்குள் ஈகோ தலை தூக்கும். பிரதோஷத்தன்று சிவனுக்கு திருமஞ்சனம் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசி பலன்கள்
30.5.22 முதல் 5.6.22 வரை
ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெற்று தந்தைக்காரகன் சூரியனுடன் பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் குலத் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். முன்னோர்களின் கூட்டுத் தொழிலில் சித்தப்பா, பெரியப்பாவுடன் பங்குதாரராக இணையும் வாய்ப்பு உள்ளது. 4,7ம் அதிபதி குரு 7ல் ஆட்சி பலம் பெறுவதால் வாழ்க்கைத் துணை மூலம் மதிப்பு அதிகமான சொத்து, பணம், நகைகள் கிடைக்கும். தனாதிபதி சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவுடன் கூடி நிற்பதால் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
திருமணத்திற்கு உங்கள் இன சமுதாயத்தில் இருந்து கவுரமான நல்ல வரன் அமையும். சிலருக்கு காதல் திருமணம் கைகூடும். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். அஷ்டமாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் விவாகரத்து வழக்கு சாதகமாகும். சொத்துக்கள் விற்பனையில் நல்ல லாபம்கிடைக்கும்.
சகோதர, சகோதரிகளின் திருமண முயற்சியில் அலைச்சல் மிகுந்த பயணம் உண்டு. மனைவி வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடு உருவாகலாம் என்பதால் ஒதுங்கி இருப்பது நல்லது. இரண்டாவது பிள்ளை கல்வி, தொழிலுக்காக இடம் பெயரலாம். புதன்கிழமை ஸ்ரீ தான்ய லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22
ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைவதால் தடைபட்ட வெளிநாட்டு பயணம், வேலை வாய்ப்பு கை கூடும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் தேவைக்கு பணம் கிடைக்கும். 7-ல் செவ்வாய் மற்றும் 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் கன்னி ராசிப் பெண்களுக்கு கோட்சார ரீதியான சர்ப்ப, செவ்வாய் தோஷத்தால் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகலாம்.
கணவன், மனைவி ஒற்றுமை யாக இருந்தாலும் மூன்றாம் நபரின் குறுக்கீடு நிம்மதியின்மையை ஏற்படுத்தும் என்பதால் பிறரின் நயவஞ்சக பேச்சை நம்பக்கூடாது. செவ்வாயின் நேரடிப் பார்வை ராசியில் பதிவதால் எதையும் எதிர்கொள்ளும் துணிவும் மன தைரியமும் அதிகரிக்கும். 27.5.2022 நள்ளிரவு 12.38 முதல் 29.5.2022 காலை 11.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட முடியாது. அமாவாசையன்று பறவைகளுக்கு தானியம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிப்பலன்
இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
புதிய முயற்சிகள் மேற்கொள்ள சாதகமான வாரம். குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால்கு டும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வாக்கு வன்மை லாபம் பெற்றுத் தரும். சகோதரர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது.
சிலர் வீட்டை பழுது பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சிலர் வாகனத்தை மாற்றலாம். வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும். வியாபாரிகள் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையை அதிகரிப்பீர்கள். வெளிநாட்டு வேலை முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மேல் சுமத்தப்பட்ட பழிகள்விலகும். தினமும் ஸ்ரீ மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






