என் மலர்
கன்னி
வார ராசி பலன்கள்
4-7-2022 முதல் 10-7-2022 வரை
மனக்கசப்புகள் மாறும் வாரம். 2,9-ம் அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும். பொருளாதாரத்தில் தன் நிறைவு ஏற்படும். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும்.பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்துவாழும் கணவன், மனைவிமீண்டும் சேர்ந்து வாழ்வர்.குடும்பத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். மாணவர்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பார்கள்.
விரய அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் ராசி, பத்தாம் அதிபதி புதனுடன்இணைவதால் தொழில் நெருக்கடி இருக்கும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும். எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது.வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். குழந்தை வடிவில் உள்ள கிருஷ்ணரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






