search icon
என் மலர்tooltip icon

    கன்னி

    சோபகிருது வருட பலன் 2023

    ஏற்றம் இறக்கம் நிறைந்த வாழ்க்கை!

    தோற்றத்தில் இளமையும் அமைதியும் கொண்ட கன்னி ராசியினருக்கு சோபகிருது வருட தமிழ் புத்தாண்டு லட்சியத்தை நிறைவேற்றும் புத்தாண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 22 முதல் குருபகவான் ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

    ஜனவரி 17 முதல் சனி பகவான் 6ம்மிடத்தில் நிற்கிறார். தற்போது8, 2ல் நிற்கும் ராகு கேதுக்கள்அக்டோபர் 30க்குப் பிறகு 7,1ம்மிடம் செல்கிறார்கள்.பேராசையால் மிகக் குறுகிய காலத்தில் பெரிய தொகை சம்பாதிக்க ஆசைப்பட்டு அது விபரீத விளைவை தரும்.அதிக முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தங்களை தவிர்க்க வேண்டும்.அதிக கடன் வாங்கக்கூடாது.நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் வியாபாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். திடீர் புகழ் வரும், புகழுக்கு திடீர் பங்கம் வரும்.

    உங்களுக்கு கிடைக்க வேண்டிய மாரியாதை பிறருக்கு கிடைப்பது, வதந்திகளால் அவமானம் போன்ற மன சஞ்சலம் இருக்கும். கோட்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத காலத்தில் மனிதனுக்கு பொறுமையும் தன்னம்பிக்கையும் மிக அவசியம்.இடமாற்றம் இருந்தாலும் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்காது. மேலதிகாரியின் தொல்லை அதிகரிக்கும். தனியார் துறையில் இருப்பவர்கள் குடும்ப நலன் கருதி வேலையில் பொறுப்போடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும்.

    குடும்பம், பொருளாதாரம் : குருவின் ஏழாம் பார்வை தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் வாக்கால் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம்.பிறரால் சாதிக்க முடியாதவற்றை சாதிக்கும் திறனும் மனதில் பட்டதை தைரியமாக பேசும் தைரியமும்.வாக்கு பலிதமும் உண்டாகும். நீண்ட கால எண்ணங்கள் திட்டங்கள்பலிதமாகும்.

    இது வரை ஐந்துக்கும் பத்துக்கும் அள்ளாடியவர்களுக்கு கூட கையில் சரளமாக பணம் புரளும்.பணவரவு பல மடங்கு அதிகரிக்கும்.குடும்பதேவையை நிறைவு செய்வீர்கள். பாராமுகமாக இருந்த குடும்ப உறவுகள் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். ராகு /கேது பெயர்ச்சிக்குப் பிறகு கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபட வாய்ப்பு உள்ளது.

    பெண்கள் : இந்த தமிழ் புத்தாண்டு உங்களுடைய அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் ஆண்டாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். கணவர் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள்.சம்பள பாக்கிகள் வந்து சேரும்.

    உத்திரம் 2, 3, 4 : தன்னம்பிக்கையால் சாதிக்கும் வருடம். இயல்பாகவே நளினமான தன்மையும் மன உறுதியும் கொண்ட நீங்கள் எந்த பிரச்சினை, கஷ்டம் வந்தாலும் சோர்ந்து போக மாட்டீர்கள்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சில அசவுகரியங்கள் நடந்தாலும் முதலாளிக்காக நன்றியுடன் வேலை செய்வீர்கள். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். சொத்து வாங்குவது விற்பது சுலபமாக நடந்து முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தினமும் விஷ்ணு சகஸ்ஹர நாமம் கேட்கவும்.

    ஹஸ்தம் : சமயோஜிதமாக செயல்பட வேண்டிய வருடம்.வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் அறிவாற்றலால், செயல்திறனால் தெரிந்து கொண்டு தேவையானதை அடைவீர்கள். உங்கள் மனதை தேவையற்ற வழியில் திசை திருப்பாமல் காரியத்தின் மீதும் உயர்வின் மீதும் முழு கவனத்துடன் இருப்பீர்கள். தடைபட்ட வேலைகள் முடியும். அரசாள்பவர்களின் நட்பு கிடைக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு.

    அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். வீடு கட்ட லோன் கிடைக்கும்.வியாபார விசயங்கள் கசிவதையறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்.பணியிடத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படலாம். தூக்கமின்மை விலகும். கண்டும் காணாமல் இருந்த உறவுகள் வலிய வந்து பேசுவார்கள். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். மகா விஷ்ணு மூல மந்திரம் படிக்கவும்.

    சித்திரை 1, 2 : தடைகள் தகறும் காலம். உங்கள் தகுதியை திறமையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். தேவைக்கு பணம் வரும். செல்வாக்கு கூடும். குடும்ப நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.பூர்வீகச் சொத்து கைக்கு வரும். திட்டமிட்ட நீண்ட தூர வெளிநாட்டு பயணங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும்.

    தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும்.சிலருக்கு பொதுக் காரியங்களில் உத்தியோகத்தில் தொல்லை தந்த உயர் அதிகாரி இடமாறுவார். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவர்கள். சிவ காயத்திரி மந்திரம் படிக்கவும்.

    பரிகாரம் :திட்டை குருபகவானை நினைத்தாலே திருப்பம் நிச்சயம் உண்டு. கன்னி ராசியினர்கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் உள்ள தென்குடிதிட்டை அருள் மிகுவசிஷ்டேஸ்வரர்திருக்கோயிலில்சுவாமிக்கும்,அம்பாளுக்கும்இடையில்ராஜ குருவாக நின்றகோலத்தில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வரும் குருபகவானை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×