என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2025
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2025
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கனவுகள் நனவாகும். வருமானம் திருப்தி தரும். விண்ணப்பித்த வேலை விரைவில் கிடைப்பதற்கான தகவல் வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்-18 ஆகஸ்ட் 2025
மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறைய எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்-17 ஆகஸ்ட் 2025
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
கன்னி
இன்றைய ராசிபலன்-16 ஆகஸ்ட் 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. சேமிப்பில் சிறிது கரையலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
கன்னி
இன்றைய ராசிபலன்-15 ஆகஸ்ட் 2025
மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் உருவாகும். எடுத்த காரியங்களை நிறைவேற்ற இயலாது.
கன்னி
இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2025
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2025
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். வெளியூர் பயணமொன்றால் கையிருப்புக் கரையும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2025
வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். கலைத்துறையினரின் சந்திப்பால் காரியம் ஒன்று முடிவாகும்.
கன்னி
இன்றைய ராசிபலன்-11 ஆகஸ்ட் 2025
நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும். உடல் நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன்-10 ஆகஸ்ட் 2025
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். விரயமுண்டு. திடீர் இடமாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்றும் தொடரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்-09 ஆகஸ்ட் 2025
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.






