என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை

    31.8.2025 முதல் 6.9.2025 வரை

    எண்ணங்கள்,திட்டங்கள்,கனவுகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு பாக்கிய அதிபதி சனியின் பார்வை உள்ளது. 12 ராசிகளில் ரிஷப ராசிக்கு காலமும், நேரமும் மிகச் சாதகமாக உள்ளது. சிறு சிறு மனசஞ்சலங்கள் இருந்தாலும் இலக்கை அடைவீர்கள். பல வழிகளிலும் பண வரவு உண்டாகும்.லாபத்தால் வசதிகள் பெருகும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும்.

    புதியதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.சொந்த தொழில் செய்யும் அமைப்பு உருவாகும். சகோதர, சகோதரி ஒற்றுமை பலப்படும். மனச் சங்கடம் மறையும். பூமி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பருவ மழை பொழியும் காலம் என்பதால் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

    1.9.2025 அன்று இரவு 7.55 முதல் 4.9.2025 அன்று மாலை 5.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் சிலரின் உடல் நலிவுறும். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதால் ஆனந்தம் கூடும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×