என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
ரிஷபம்
விரும்பிய மாற்றங்கள் நிகழும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனது மற்றொரு வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்த உகந்த நேரம். பெண்களுக்கு பிறந்த வீட்டு விசேஷத்திற்கு சீரும் அழைப்பும் வரும். தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள்.
தாய்க்கும் மூத்த சகோதரிக்கும் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். உடல் நலக் குறைபாடு இருப்பவர்கள் உரிய மருத்துவரை அணுகவும். நெருங்கிய உறவில் திருமண முயற்சி கைகூடும். வீடு, மனை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை திக்கு முக்காடச் செய்யும். தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது.
22.11.2025 மாலை 4.47 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். இதனால் சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






