என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை

    14.12.2025 முதல் 20.12.2025 வரை

    ரிஷபம்

    மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் குரு மற்றும் சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள். பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம், மற்றவர்களால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும்.

    இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

    வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதானமாக செயல்பட்டால் அரசு வகையில் யாவும் அனுகூலமாகும். 19.12.2025 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அன்றையதினம் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். விநாயகர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×