என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை
13.7.2025 முதல் 19.7.2025 வரை
நினைத்தது நிறைவேறும் வாரம். ராசிநாதன் சுக்ரனுக்கு லாப ஸ்தான சனியின் பார்வை. தன ஸ்தானத்தில் குரு பகவான் என கிரக நிலவரம் மிக சாதகமாக உள்ளது. பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்காக திட்டமிடுவீர்கள். அரசு வகை காரியங்கள் சாதகமாக முடியும் உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
தாயாருக்கு ஏற்பட்ட வைத்திய செலவுகள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் நிலவிய பகை மாறும். சுப மங்கள விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வெளி வட்டாரத்தில், செல்வாக்கு, புகழ் அந்தஸ்து உயரும். தொழிலில் நிலைத்து நிற்க முடியுமா? என்ற மன பயத்துடன் இருந்தவர்களுக்கு திருப்புனையான நேரம்.
திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து எதிர்பாராத தன வரவு கிடைக்கும். புத்தாடை தங்கம் வெள்ளி நகைகள் வாங்கும் யோகம் கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் பற்றிய பயம் விலகும். உறவினர்களால் சிறு சிறு செலவினங்கள் வரலாம். தினமும் லலிதா சகஸ்ரநாமம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






