என் மலர்
ரிஷபம் - வார பலன்கள்
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
6.3.2023 முதல் 12.3.2023 வரை
வெற்றிகரமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால் இதுவரை குடும்பத்தில் இந்த பிரச்சினைகள், தொழில் ரீதியாக சந்தித்த ப அப்புகள் விலகும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சில அண்ணன்-தம்பிகள் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.தொழில் விரிவாக்கம் மற்றும் சொத்துக்களுக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். 12-ம்மிட ராகுவால் செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த தண்டனையில் இந்து விடுபடுவீர்கள்.
திருமணத் தடை அகலும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். சிலருக்கு மறு திருமணம் நடக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.
புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் போன்றவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மாணவர்கள் விரும்பிய கல்வியை விரும்பிய கல்லூரியில் இந்த ஆண்டு தொடர முடியும். மாசி மகத்தன்று சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
27.2.2023 முதல் 5.3.2023 வரை
லாபகரமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சிலருக்கு உழைக்காத அதிர்ஷ்ட வருமானம் உண்டு. தொட்டது துலங்கும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
தாராள தன வரவால் உடலும், உள்ளமும் குளிரும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை கூடும்.வீடு, தோட்டம், வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. தள்ளிப் போன பத்திரப் பதிவு, பாகப்பிரிவி னைகள் இனிதே நடக்கும். மூத்த சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு சுமூகமாகும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். விண்ணப்பித்த அரசு உத்தி யோகத்திற்கு சாதகமான பதில் கிடைக்கும். ராசியில் உள்ள செவ்வாயால் தம்பதிகளிடம் நிலவிய ஈகோ தணியும்.
பிரித்த தம்பதிகள் கூடி வாழும் சந்தர்ப்பம் உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். மறு திருமண முயற்சி வெற்றி தரும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். திரைக்கலை ஞர்களின் தனித்திறமை மிளிரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
20.2.2023 முதல் 26.2.2023 வரை
லாபகரமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சம் பெற்று லாப அதிபதி குருவுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். புதிய தொழில், உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.
பொருளாதாரநிலை சிறப்பாகி வாழ்க்கைத்தரம் உயரும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் யோகமும் உள்ளது. வராக்கடன்கள் வசூலாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. கடந்தகால வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் சுபச் செலவு ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம்.
இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினை இனி இல்லை. சின்னத்திரை, பெரியதிரை கலைஞர்களின் திறமைகள் போற்றப்படும்.பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமாகும். அமாவாசையன்று கோ பூஜை செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
13.2.2023 முதல் 19.2.2023 வரை
தன்னம்பிக்கையும், துணிவும் அதிகரிக்கும் வாரம். ராசியில் செவ்வாய் இருப்பதால் வீண் கவலைகள் நீங்கி துணிச்சல், தைரியம்அதிகரிக்கும். மனதில் தோன்றும் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும். ராசி அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் உங்களது பெயர்,புகழ், சமுதாய அந்தஸ்து உயரும். பல பெரிய மனிதர்களின் நட்பால் நற்பலன்கள் உண்டாகும்.பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெறும். சொந்த மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிரிந்து வாழ்ந்த தாயும், தந்தையும் சேர்ந்து வாழத்துவங்குவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் குறையும்.சிலருக்கு தொழில், உத்தியோக ரீதியான வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் அமையும். முதலீட்டாளர்களுக்கு அரசு வழியில் மானியங்கள், உதவிகள் கிடைக்கும்.
15-ந் தேதி காலை 12.45 மணி முதல் 18-ந் தேதி காலை 1.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பமும், பதட்டமும் அதி கரிக்கும். சிவராத்திரியன்று சிவனுக்கு ரோஜா மாலை அணிவித்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
அனுகூலமான வாரம். ஒன்பதாமிடத்தில் நான்காம் அதிபதி சூரியனும் இரண்டு, ஐந்தாம் அதிபதி புதனும் நிற்பதால் தாய், தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். தடைபட்ட வெளிநாட்டு பயணம் சாதகமாகும். ராசி அதிபதி சுக்ரன் பத்தாம் அதிபதி சனியுடன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் இணைவதால் புதிய தொழில் துவங்க ஏற்ற காலம். அரியர்ஸ் ஓவர் டைம் ஊதியம் இப்பொழுது கிடைக்கும்.
சிலருக்கு வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலை பார்க்குமிடத்தில் எதிர் பாலினத்தவரை அனுசரித்து செல்லவும். தடைபட்ட வெளிநாட்டு பயணம் உறுதியாகும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உறுதி. பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். விரய ஸ்தான ராகுவை சனி பார்ப்பதால் சிலருக்கு வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும். திருமண முயற்சி வெற்றி தரும். மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பாக்கியா அதிபதி சனியுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைவது மிகச் சிறப்பான கிரக அமைப்பு. பாக்கிய ஸ்தானத்தில் சனியும் சுக்ரனும் சேரும் இந்த கிரக அமைப்பு இனி 30 வருடம் கழித்து தான் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும். இதனால் தன யோகம் சிறப்பாக அமையும். தந்தை மகன் உறவில் பாசமும் மனநிறைவும் உண்டாகும். குல தெய்வ அருளால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும்.சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் முதலீடுகளை அதிகரிக்க முடியும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.
திருமணமுயற்சி விரைவில் பலிதமாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல முறையில் குழந்தைப்பேறு உண்டாகும். பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள். மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். ஏகாதசியன்று ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
23.1.2023 முதல் 29.1.2023 வரை
தன்னம்பிக்கை உயரும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி சனியுடன் சேர்க்கை பெறுவதால் புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். உழைப்பும் பொறுப்புகளும் அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் ஏற்பட்ட அவப்பெயர் விலகும். இன்னல்களை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.வீடு, நிலம், தோட்டம் வாங்கும் அமைப்பும் சிலருக்கு உருவாகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள்.
பிள்ளைகளின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். சிலருக்கு உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகளும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்படும். விண்ணப்பித்த அரசு வேலை கிடைக்கும்.திருமணத்திற்கு ஏற்ற காலம்.ஆண்களுக்கு மாமனாருடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். சொத்துக்கள் மற்றும் கடன்களின் மீது கவனம் தேவை. ஆன்மீக எண்ணங்கள் சற்று அதிகரிக்கும். துர்க்கை வழிபாடு நல்லது.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
16.1.2023 முதல் 22.1.2023 வரை
சிறப்பான வாரம். ராசி அதிபதி சுக்ரனும் 9,10-ம் அதிபதி சனியும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம், அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். அதற்குத் தேவையான நிதி உதவி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.
தாய், தந்தை வழி ஆதரவு உண்டு. வீடு வாங்கும் முயற்சியில் இருந்த குழப்பங்கள் அகலும். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். குடும்பத்தினரால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு புதுவிதமான பொருட்களை வாங்க வேண்டும் என்கின்ற ஆசை அதிகமாக உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.
19.1.2023 மதியம் 3.17 மணி முதல் 21.1.2023 மதியம் 2.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பொறுமையும், நிதானமும் தேவை. வெள்ளிக்கிழமை கோ பூஜை செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
9.1.2023 முதல் 15.1.2023 வரை
எண்ணத்தில் தெளிவு உண்டாகும் வாரம். ராசியில் நிற்கும் 7, 12-ம் அதிபதி செவ்வாய் வக்ர நிவர்த்தி பெறுவதால் வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட சங்கடங்கள், விரயங்கள் சீராகும். புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய நட்புகளால் சந்தோஷம் உண்டாகும். புதிய நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருந்த சங்கடங்கள் குறையத் துவங்கும். குடும்பத்தாரின் அன்பும் அனுசரணையும் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம், புத்திரபாக்கியம், உயர் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான சுபபலன்களும் கைகூடும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூருக்கு மாறுதல் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றிவிடுவீர்கள். நிம்மதியாக உறங்கி, சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
2.1.2023 முதல் 8.1.2023 வரை
எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பாக்கியா அதிபதி சனியுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைவது மிகச் சிறப்பான கிரக அமைப்பு. பாக்கிய ஸ்தானத்தில் சனியும் சுக்ரனும் சேரும் இந்த கிரக அமைப்பு இனி 30 வருடம் கழித்து தான் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும். இதனால் தன யோகம் சிறப்பாக அமையும். தந்தை மகன் உறவில் பாசமும் மனநிறைவும் உண்டாகும்.
குல தெய்வ அருளால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும்.சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் முதலீ டுகளை அதிகரிக்க முடியும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.
திருமணமுயற்சி விரைவில் பலிதமாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல முறையில் குழந்தைப்பேறு உண்டாகும். பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள். மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். ஏகாதசியன்று ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
ராசி அதிபதி சுக்ரன் 2,5-ம் அதிபதி புதன் மற்றும் 4-ம் அதிபதி சூரியனுடன் அஷ்டம ஸ்தானத்தில் சேர்க்கை பெறுகிறது. விபரீத ராஜ யோகத்தால் மறைமுக லாபம் கிடைக்கும். அனைத்து முயற்சிகளும் நிறைவேறும். உணவுத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்ற பணியில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். அரசு வேலைக்கான முயற்சி கைகூடும். புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரிகள் மூலம் படிப்பு சம்பந்தமான சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது. பெண் களுக்கு குடும்பப் பொறுப்புகள் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.
23.12.2022 அதிகாலை 4.02 மணி முதல் 25.12.2022 அதிகாலை 3.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பசுவிற்கு அமாவாசையன்று அகத்திக் கீரை வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
விபரீத ராஜ யோகமான வாரம். ராசி அதிபதி சுக்ரனும் 2,5-ம் அதிபதி புதனும் சேர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் சேர்வதால் லாட்டரி, பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை ஏற்படலாம்.
அஷ்டமாதிபதி குருவை பாக்கியஅதிபதி சனி பார்ப்பதால் விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம். அலுவலகத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






