என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
லாபகரமான வாரம்.ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் விலகும். மலை போல வந்த துயரம் பனி போல் விலகும். தொழில், வியாபார நெருக்கடி நிலை மாறும். பூர்வீகச் சொத்தைப் பிரிப்பதில் தாய் மற்றும் தந்தை சகோதரருக்கு சாதகமாக செயல்படுவார்கள். செல்வச் செழிப்பு கூடும். எதிர் கால வாழ்வா தாரத்திற்குத் தேவையான சேமிப்பை உயர்த்த ஏற்ற நேரம்.
அரசின் ஒப்பந்ததாரர்கள், குத்தகை தாரர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். வீடு, மனையில் புதிய முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பாளர்களின் நட்பு கிடைக்கும். கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் ஓடி வரும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
பெண்களுக்கு மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் நிவர்த்தியாகி திருமண வாய்ப்பு தேடி வரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைத்தியச் செலவு குறையும். பிரதோஷ நாட்களில் நந்திய பகவானுக்கு பஞ்சா மிர்தம் அபிஷேகம் செய்து வழிபட்டால் பலவிதமான செல்வமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






