என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை
29.6.2025 முதல் 5.7.2025 வரை
நிம்மதியான வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். எண்ணங்கள் நிறைவேறும். சுய முயற்சிகள் வெற்றி தரும். எவரும் செய்ய தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். பணம் சம்பாதிக்க பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும்.
ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வரும். மனைவி வழி சொத்து கிடைக்கும். தொழில் விருத்தி உண்டாகும். தொழிலில் தன வரவு தாராளமாக வந்து சேரும். அங்காளி, பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு சீராகும்.
அரசியல் ஆர்வலர்கள் கட்சிக்காகவும், பொதுமக்களுக்காவும் மிகுதியாக உழைக்க வேண்டிய நேரம். மற்றவர்களுக்கு வாக்குக்கொடுப்பதையோ முன் ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். சிறுசிறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும். செவ்வாய் கிழமை முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






