என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை
27.4.2025 முதல் 03.5.2025 வரை
எதிர்பார்த்த இலக்கை அடையும் வாரம். ராசிக்கு குருப்பார்வை இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. முக்கிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளால் தளர்ந்த தொழில்கள் தலை தூக்கும். குடும்ப சுமை குறையும். எதிர்பார்த்த தன வரவுகள் இருக்கும்.
அத்தியாவசிய தேவைக்கு தடுமாறிய நிலை மறையும். பெற்றோர்களின் ஆதரவால் குடும்ப சுமைகள் இலகுவாகும். சில மாணவர்கள் கல்வி அல்லது விளையாட்டு தொடர்பாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் சகாய விலையில் பட்டா இல்லாத அல்லது வாரிசு இல்லா சொத்துக்கள் கிடைக்கலாம்.
திருமணத் தடை அகலும். வசதியான வாழ்க்கைத் துணை கிடைப்பார். 1.5.2025 அன்று அதிகாலை 3.15 மணி முதல் 3.5.2025 அன்று காலை 6.37 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் பிள்ளைகளின் முன்னேற்ற செலவிற்கு கடன் பெறலாம். உடல் அசதி இருக்கும். சிலருக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் மன தடுமாற்றம் ஏற்படலாம். ஸ்ரீ கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






