என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
விருச்சிகம்
தன வரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றுள்ளார். 8,11ம் அதிபதி புதனுடன் குரு பார்வையில் சேர்ந்து உள்ளார். திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுப்பெறுவீர்கள். எதிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
வர வேண்டிய பணங்களில் ஏதேனும் தடை தாமதங்கள் இருந்தால் இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். திறமை வெளிப்படும். வழக்குகள் சாதகமாகும். சமுதாய அந்தஸ்து நிறைந்த பெரியோர்களின் நட்பு கிடைக்கும்.
பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன கனவு நனவாகும். தாய் வழி முன்னோர்களிட மிருந்து நில, புலன், பணம் கிடைக்கும். கந்த சஷ்டி அன்று செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






