என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை
15.6.2025 முதல் 21.6.2025 வரை
கலகலப்பான சூழ்நிலை உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும். குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் உறவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். வீட்டில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் கூடும். கடின உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.
பழைய கடன்களை அடைக்கக் தேவையான வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி முன்னேற்றமான பலன்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். குல தெய்வ பிரார்த்தனைகளை செலுத்துவது பற்றிய சிந்தனை உருவாகும். சிலர் வெளிநாட்டு கம்பெனிக்கு வேலையை மாற்றுவார்கள். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடம் பெயர நேரும்.
திருமண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலருக்கு காதலால் பிரச்சினைகள் அதிகரிக்கும். மனைவி வழிச் சொத்தில் நிலவிய இடையூறுகள் அகலும். பெண்களுக்கு கணவரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். தினமும் அபிராமி அந்தாதி கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406