என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
01.06.2025 முதல் 07.06.2025 வரை
பெரும்பான்மையான பலன்கள் சாதகமாக அமையும் வாரம். ராசிக்கு சூரியன் புதன் பார்வை இருப்பதால் எதிர் நீச்சல் போட்டு வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். புதிய அனுபவங்கள் கிட்டும். பல காலமாக சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தவர்களுக்கு விசேஷமான சம்பள உயர்வு உண்டு. சிலர் உத்தி யோகத்தில் இருந்து விடுபட்டு புதிய தொழில் துவங்கலாம்.
உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளுவால் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட நேரும். மூத்த சகோதர, சகோதரி மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சொத்துக்கள் மூலம் வாடகை வருமானம் வந்து கொண்டே இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். மருத்துவச் செலவுகள் நீங்கும்.
பூமி, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் மிகுந்த பயணத்தால் டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிகளுக்கு இந்த வாரத்தில் குழந்தை பிறக்கும். எதிர்பார்த்த வரன் தேடி வரும். ஸ்ரீ வீர லட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






