என் மலர்

    விருச்சகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    இந்த வார ராசிப்பலன்

    15.8.2022 முதல் 21.8.2022 வரை

    அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும் வாரம்.2,5-ம் அதிபதி குரு 5-ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுவதால் வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்திற்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்‌. நடக்குமா என்ற காரியத்தை தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகளைவேரோடு பிடுங்கி எறிவீர்கள். எதிரிகள் ஒதுங்குவார்கள்.

    தொழிலுக்காக விண்ணப்பம் செய்த லைசென்ஸ் கிடைக்கும். 7-ம் அதிபதி சுக்ரன் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணை தொழிலுக்காக கடல்கடந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது.எதிர்பாராத இடங்களில் இருந்து பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவையான பண வரவு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது நல்ல முன்னேற்றம் தரும்.

    மாணவர்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். தள்ளிப் போன திருமண காரியங்கள் கூடி வரும்.பெண்கள் குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள். தினமும் விநாயகர் அகவல் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×