என் மலர்tooltip icon

    விருச்சகம் - வார பலன்கள்

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    29.1.2024 முதல் 4.2.2024 வரை

    ஆதாயமான வாரம். ராசி அதிபதி செவ்வாயும் 7-ம் அதிபதி சுக்ரனும் தன ஸ்தானத்தில் சேர்க்கை. விரும்பிய காரித்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு கூடும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

    வெளி வட்டாரத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகளின் சுப விசேஷத்திற்கு எதிர்பாராத பண உதவி கிடைக்கும். வீடு, வாகனக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய இடம், வீடு வாங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். குல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். திருமணத் தடை அகலும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நவக்கிரக வழிபாட்டால் சங்கடங்கள் விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    22.1.2024 முதல் 28.1.2024 வரை

    முட்டுக்கட்டைகள் அகலும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் நட்பு கரம் நீட்டுவார்கள். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும்.புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை, நாணயம் உயரும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்வீர்கள்.

    குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். கடன் சுமை குறையும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். 22.1.2024 அன்று பகல் 4.22 மணி முதல் 25.1.2024 அன்று நள்ளிரவு 1.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள். தைப்பூசத்தன்று பழனி முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    15.1.2024 முதல் 21.1.2024 வரை

    திறமையும் செயல் வேகமும் கூடும் வாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் சகாய ஸ்தா னத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பேச்சை மூலதனமாக கொண்ட வர்களின் தனித் திறமை வெளிப்படும். உத்தியோ கத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். பதவி உயர்வில் நிலவிய தடைகள் அகலும். வெளிநாட்டு வேலை, அரசு உத்தியோக முயற்சி பலன் தரும்.பொங்கல் பண்டிகையில் விலை மதிப்பில்லாத உறவுகளை நேரில் பார்த்து மகிழ்வீர்கள். 5-ல் ராகு இருப்பதால் மனதில் அவ்வப்போது தேவையற்ற சில சந்தேகங்களும் கற்பனை பயமும் உண்டாகலாம்.பிள்ளைகளிடம் நிதானம் காட்டவும்.பெண்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் நிதானமாக இருப்பது நல்லது. குடும்ப பிரச்சினைகளை வெளிநபர்களிடம் கூறி ஆலோ சனை கேட்பதை தவிர்க்கவும். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு கிடைக்கும். பணவரவு தாரளமாக இருந்தாலும், தேவையற்ற அலைச்சல்கள் விரயங்கள் ஏற்படலாம். மாற்று முறை வைத்தியம் பலன் தரும். முருகனை வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    8.1.2024 முதல் 14.1.2024 வரை

    விபரீத ராஜ யோகமான வாரம். ராசியில் சுக்ரன். தன ஸ்தானத்தில் ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமாதிபதி புதனுடன் சேர்க்கை. அர்த்தாஷ்டமச் சனியால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும். வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள்.தங்களை மாய்த்துக்கொள்ள துணிந்தவர்கள் கூட மனம் மாறுவார்கள். கால மாற்றத்தினால் ஏற்படும் நோய் மற்றும் தடை தாமதம் விலகும். தொழில் ரீதியான முன்னேற் றமும் நிலையான வருமானம் உண்டாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் ஏற்படும்.வீடு, நிலம், தோட்டம் வாங்கும் அமைப்பு உருவாகும். எதிர் பாலினத்தவரிடம் எச்சரிக்கை அவசியம் தேவை.சிலர் மன நிம்மதிக்காக வீடு மாறுவார்கள்.

    நோய் தாக்கம் குறையும். வழக்குகளில் சாத கமான தீர்ப்பு எதிர்பார்க்கலாம். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு தெய்வ நம்பிக்கை குறைந்து மதம் மாறும் சிந்தனை, வேற்று மத நம்பிக்கை மேலோங்கும். சிலர் குடியிருப்புகளை லீசுக்கு விடலாம். அமாவாசையன்று பெற்றோர்களின் நல்லாசியை பெறவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    1.1.2024 முதல் 7.1.2024 வரை

    தொழில் முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தான அதிபதி சூரியனுடன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியான அனுகூலம் உண்டாகும். சிறு வியாபாரிகளுக்கு மழையால் விற்காமல் தேங்கிய பொருட்கள் விற்பனையாகும். தொழிலுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு உருவாகலாம். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். பெற்றோர் வழியில் இருந்த எதிர்ப்புகள் அகலும். குடும்பத்துடன் குல தெய்வ வழியாடு செய்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையோடு ஏற்பட்ட மனப்போராட்டம் அகலும். விலகிய உறவுகள் வந்து சேருவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் கவுரவப் பதவிகள் கிடைக்கும் .

    சிலர் சொத்தை அடமானம் வைத்து கடன் பெறலாம். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கிருத்திகையன்று முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    25.12.2023 முதல் 31.12.2023 வரை

    மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் தன அதிபதி குருவின் பார்வையில் சஞ்சரிப்பதால் தடைக் கற்கள், படிக்கற்களாக மாறும். கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் மாறி நன்மை தரும் ஆண்டாக மாறும்.எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச்சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். திருமணத் தடை அகலும். 5-ல் ராகு இருப்பதால் பங்குச் சந்தை ஆதாயம், பாலிசி முதிர்வு தொகை, பூர்வீக சொத்து விற்பனையில் அதிக ஆதாயம் உண்டாகும். செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை உருவாகும். குழந்தைகளை நேரடி பொறுப்பில் கண்காணிக்கவும். எதிரிகள் இருந்த இடம் தெரியாது.

    குடும்ப சுப செலவிற்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். தேவையற்ற எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிநாட்டு வேலை, அரசு வேலை முயற்சி வெற்றியாகும். 26.12.2023 காலை 9.57 முதல் 28.12. 2023 மாலை 6.37வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குழப்பமான மன நிலையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். வீர பத்திரரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    18.12.2023 முதல் 24.12.2023 வரை

    கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றது சிறப்பு. அவரே 6-ம் அதிபதி என்பதால் கடன் பிரச்சினை உண்டாகும்.தன ஸ்தானத்தில் 8,11-ம் அதிபதி புதன் வக்ரம் பெறுவதால் திடீர் அதிர்ஷ்ட தன லாபம் கிடைத்து அதன் மூலம் சட்ட நெருக்கடியும் ஏற்படலாம்.தொழில் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க முடியாத நிலை உருவாகும்.லாபம் நிற்காது அல்லது வருமானம் குறைவுபடும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.புதிய வீடு வாங்க திட்டமிடுவீர்கள்.தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். பல் தொடர்பான சிகிச்சைகளான சொத்தை பல் அகற்றுதல், செயற்கை பல்செட் பொருத்துதல் போன்ற சிகிச்சைகள் பலன் தரும்.அண்டை அயலா ருடன் நல்லிணக்கம் உண்டாகும்.புதிய எதிரிகள் தலை தூக்குவார்கள். மழையால் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். சில சங்கடங்கள் நிலவினாலும் அனைத்தும் சூரி யனைக் கண்ட பனியாக மறையும். ஏகாதசியன்று அவல் பாயாசம் படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    11.12.2023 முதல் 17.12.2023 வரை

    கருமமே கண்ணாக செயல்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி. தொழில் ஸ்தான அதிபதி சூரியன் ராசி அதிபதியுடன் இணைவு என கோட்சார கிரகங்களின் செயல்பாடுகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகளால் வருவாய் பெருகும்.வியாபார போட்டிகளை சூழ்நிலைக்கு ஏற்ப பேசி காரியம் சாதிப்பார்கள். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு கிடைக்கும். சொத்து இல்லாதவர்களுக்கு புதிய வீடு, வாகன யோகம் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பஞ்சம ஸ்தான ராகுவால் வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பம் ஏற்படும்.

    வேற்று மத நம்பிக்கை அதிகரிக்கும்.பெண்களுக்கு பிறந்த வீட்டு பாகப்பிரிவினை சொத்து, பணம், நகை கிடைக்கும். ஜாமீன் வழக்கு, செக் மோசடி வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். கை கால் வலி மற்றும் உடல் உபாதைக்கு வைத்தியம் செய்வீர்கள். அமாவாசையன்று பால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    4.12.2023 முதல் 10.12.2023 வரை

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் ராசியில் ஆட்சி செய்கிறார். விரய அதிபதி சுக்ரன் ஆட்சி 5ல் ராகு, 11-ல் கேது, 8,11-ம் அதிபதி புதன் தன ஸ்தானத்தில் என சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதக மாகவும் உள்ளது. அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பொருளாசை மிகுதியாகி தவறாக செயல்பட தூண்டப்படும். எனவே தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று தவறான முடிவை எடுக்கவைக்கும் காலம். உத்தியோ கஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம்.ஊர் மாற்றும் எண்ணம் பலிதமாகும்.

    பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நன்மையும் தீமையும் கலந்த வாரமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். திருமணத் தடை அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.தினமும் சிவபுராணம் படித்து வர நிம்மதி உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    26.11.2023 முதல் 3.12.2023 வரை

    நியாயமான ஆசைகள் நிறைவேறும் வாரம் .ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தான அதிபதி சூரியனுடன் சனி பார்வையில் ஆட்சி செய்கிறார். திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். உடன் பிறந்த வர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்க சப்பு மாறும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியா தையும் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்ட வர்கள் மேன்மை அடைவார்கள். தாய் வழி உறவுக ளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்து வீர்கள். 5-ல் ராகு இருப்பதால் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலையக்கூடாது.

    தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும். ராசி அதிபதி செவ்வாயே 6-ம் அதிபதியாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 29.11.2023 அன்று இரவு 1.40 மணி முதல் 1.12.2023 அன்று காலை 10.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் விரயங்கள் ஏற்ப டலாம். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மன சஞ்சலத்தால் தாமத மாகும். அன்றைய தினம் யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக்கூடாது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    20.11.2023 முதல் 26.11.2023 வரை

    சோதனைகள் சாதனைகளாகும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் 3, 4-ம் அதிபதி சனியும் ஒன்றையொன்று பார்ப்பதால் உங்களின் முயற்சிகள் நிறைவேறும். தைரியம், தெம்பு உருவாகும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். ஆயுள் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கோட்சார ராகு, கேதுக்களால் திருமணம் தடைபடாது.

    பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சினைகள் சீராகும். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிரும். தனவரவு இரட்டிப்பாகும். பார்த்துச் சென்ற வரனிடம் நல்ல பதில் வரும்.விரும்பிய வரன் கிட்டும். சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். அசையும், அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டு வேலை அரசு உத்தியோக முயற்சி சித்திக்கும். திருக்கார்த்தி கையன்று முருகப் பெருமானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    13.11.2023 முதல் 19.11.2023 வரை

    சோதனைகள் சாதனையாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 3, 4ம் அதிபதி சனியை பார்ப்பதால் ஆயுள் ஆரோக்கியம் சீராகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும்.தைரியம் ,தெம்பு உருவாகும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கோட்சார ராகு/கேதுக்களால் திருமணம் தடைபடாது. பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகள் சீராகும்.எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிறும். இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். தன வரவு இரட்டிப்பாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும்.

    அசையும், அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு, அரசு உத்தியோக முயற்சி சித்திக்கும்.உடன் பிறந்தவர்களுடன் தாயை யார் பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடு அதிகரிக்கும். சஷ்டி திதியில் வள்ளி தெய்வானை சமேத முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×