என் மலர்
விருச்சகம்
2025 ஆவணி மாத ராசிபலன்
விருச்சிக ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். இடம், பூமி சேர்க்கையும், எடுத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் பரவும். வருமானம் பெருக வழியமைத்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகத்துடன் இயங்கு வீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்த சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல விதமாக முடியும். நாடாளும் நபர்களின் நட்பால் புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது சகல பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். வாகன யோகம் முதல் வளர்ச்சி தரும் யோகம் வரை அனைத்தும் வந்து சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். உதிரி வருமானங்கள் பெருகும். 'புத சுக்ர யோகம்' இருப்பதால் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாக வந்துசேரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கிளைத் தொழில்கள் தொடங்கவும் முயற்சி செய்வீர்கள். செய்யும் முயற்சி கைகூடும். புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்தபடியே ஒருசிலருக்கு சுயதொழில் செய்யும் சூழலும் உருவாகும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இனிய பலன்கள் ஏராளமாக நடை பெறும் நேரம் இது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பவர் செவ்வாய். அவர் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். வருமானம் உயரும். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது வளர்ச்சி கூடும். வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புகழ் பெற்றவர்களின் சந்திப்பால் வளர்ச்சி கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, அதை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு வரன்கள் வாசல் தேடி வரும் நேரம் இது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 20, 21, 22, 26, 27, 28, செப்டம்பர்: 2, 3, 4, 7, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.






