என் மலர்tooltip icon

    விருச்சகம்

    2024 மார்கழி மாத ராசிபலன்

    வெற்றியை குறிக்கோளாக கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இருப்பினும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. லாபாதிபதியான புதன் உங்கள் ராசியில் இருக்கிறார்.

    எனவே இம்மாதம் தொட்டது துலங்கும். தொழில் வெற்றி நடைபோடும். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு சிறு தொல்லைகள் தோன்றி மறையும். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    செவ்வாய்- சுக்ரன் பார்வை

    மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். சுக்ரன், கும்ப ராசிக்கு சென்ற பிறகும் செவ்வாயின் பார்வை அதன் மீது பதிகிறது. உங்கள் ராசிக்கு அதிபதியாகவும் 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் செவ்வாய். அவர் சுக்ரனை பார்க்கும் வேளையில், வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

    ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு, இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடந்தேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கேட்ட சலுகைகள் கிடைக்கும். பூமி விற்பனையால் ஒரு சிலருக்கு லாபம் உண்டு. எனவே தொடர்ந்து நன்மைகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவதன் மூலம் சுப விரயங்கள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை இருந்தாலும், கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். உத்தியோகத்தை பொறுத்தவரை வேலைப்பளு கூடுதலாக இருக்கும்.

    தொழில் நடத்துபவர்கள் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவர். குரு பகவான் வக்ரமாக இருந்தாலும், அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நல்ல சந்தர்ப்பங்கள் உங்களை நாடி வரும். இக்காலத்தில் குரு பகவான் வழிபாடு மேலும் நன்மைகளை வழங்கும்.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சுக ஸ்தானத்திற்கு செல்லும் போது ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்பு கைகூடும். பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள்.

    மணி விழா, மண விழா, கடை திறப்பு விழா போன்றவை நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். லாபாதிபதியான புதன், உங்கள் ராசியின் தன ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தொழிலில் தன லாப விருத்தி உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். தொழில் கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். சொந்தங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் வளர்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் தலைமை பதவிகள் தானாக வரலாம். பிள்ளைகளின் திருமணம் சீரும், சிறப்புமாக நடைபெறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 23, 24, 30, 31, ஜனவரி: 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    ×