என் மலர்tooltip icon

    விருச்சகம்

    2024 கார்த்திகை மாத ராசிபலன்

    நேர்மறை சிந்தனையால் வாழ்வை வளப்படுத்தும் விருச்சிக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அந்த நேரம் குருவின் பரிபூரணப் பார்வை, உங்கள் ராசியில் பதிகிறது. எனவே செல்வ நிலை உயரும்.

    செல்வாக்கு அதிகரிக்கும். கல்யாண முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமை பொறுப்புகள் தானே தேடிவரும். தொழில் வெற்றி நடை போடும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் தோன்றி மறையும். 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுவதால் புகழ்கூடும். புனிதப் பயணங்களும் உண்டு.

    குரு வக்ரம்

    ரிஷப ராசியில் உள்ள குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறும் பொழுது சுப விரயங்கள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இது போன்ற நேரங்களில் இல்லம் கட்டி குடியேறுவது, கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

    பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்க நிலை இருந்தாலும், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். வாழ்க்கை துணைக்கு வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளை தீர்க்க ஒரு தொகையை செலவிடுவீர்கள். வெளியூரில் படிக்கும் பிள்ளைகளோ அல்லது வேலை பார்க்கும் பிள்ளைகளோ இருந்தால், அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.

    சனி - செவ்வாய் பார்வை

    கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். அவர் நீச்சம் பெற்றிருப்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் 4-ம் இடத்தில் செவ்வாயின் பார்வை பதிவதால், தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

    பிரச்சினையாக இருந்த அண்ணன் - தம்பி களின் உறவு பலப்படும். தொழில் முயற்சியில் ஆர்வம் அதிகம் காட்டுவீர்கள். துணிவையும், தன்னம்பிக்கையை யும் தக்க வைத்துக்கொள்ளுங்கள். குலதெய்வ பிரார்த் தனைகளை நிறைவேற்றுங்கள், நல்லது நடக்கும்.

    மகர - சுக்ரன்

    கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது, குடும்பப் பிரச்சினைகள் அகலும். பெருமைக்குரிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

    வெளிநாட்டில் இருந்து ஆதா யம் தரும் தகவல் கிடைக்கும். பெண்களால் பெருமை சேரும். பழைய வாகனங்களை கொடுத்து விட்டு, புதிய வாகனம் வாங்கலாம் என்ற எண்ணம் கைகூடும்.

    செவ்வாய் வக்ரம்

    கடக ராசியில் உள்ள செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் அருகில் இருப்பவர்களின் அனு சரிப்பு குறையலாம். 'அதிக செலவு ஏற்படுகிறதே' என்று கவலைப்படுவீர்கள். அதே நேரம் வாங்கிய சொத்துகளால் லாபம் உண்டு.

    தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணப்பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்துசேரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, புகழ் அதிகம் வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வெற்றி நடைபோடும்.

    உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு கிடைக்கும். பெண்களுக்கு சுபச்செலவுகள் வந்த வண்ணமாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 21, 22, 25, 26, 27, டிசம்பர்: 3, 4, 5, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    ×