என் மலர்tooltip icon

    தனுசு

    2025 புத்தாண்டு ராசிபலன்

    குரு பார்த்தபின் குழப்பங்கள் தீரும் தனுசு ராசி நேயர்களே!

    புத்தாண்டு வந்துவிட்டது. புதிய திருப்பங்கள் பலவும் காணப்போகிறீர்கள். மூன்றாம் இடத்தில் இருக்கும் சனி முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்துக் கொடுப்பார். குருப் பெயர்ச்சிக்குப் பின், உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். பொருளாதார நிலை உச்சம் பெறும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிந்த பிறகு நல்ல பலன்கள் இல்லம் தேடி வந்தபடி இருக்கும்.

    புத்தாண்டின் கிரக நிலை

    புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, 6-ம் இடத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு வக்ரம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது நன்மை செய்யும். எனவே எதிரிகளின் பலம் குறையும். ஆரோக்கியத் தொல்லை அகலும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் இருப்பதால், உத்தியோகத்தில் இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்று, சுயதொழில் தொடங்க ஆர்வம் காட்டுவர்.

    விரயாதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவதால் விரயங்கள் குறையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பூர்வீகச் சொத்துகளை விற்று, புதிய சொத்துகள் வாங்குவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் உண்டு. சகாய ஸ்தானாதிபதியான சனி, சகாய ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். என்றாலும் ராகு - கேதுக்களின் ஆதிக்கம் இருப்பதால் இடம், பூமியால் பிரச்சினைகள் வரலாம். வருடத்தின் பிற்பாதியில் மனக்குழப்பம் அதிகரிக்கும். சர்ப்பப் பரிகாரங்கள் செய்வது நல்லது.

    கும்ப - ராகு, சிம்ம - கேது

    26.4.2025 அன்று ராகு-கேதுக் களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் பங்குதாரர்கள் நெருக் கடியை உருவாக்குவர். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும்.

    9-ம் இடத்தில் கேது இருப்பதால் பூர்வீக சொத்துகளாலும், புதிய சொத்துக்களாலும் பிரச்சினை உருவாகும். இக்காலத்தில் ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். வீண்பழிகள் ஏற்படு வதை தவிர்ப்பது நல்லது. அருகில் இருப்பவர்களின் ஆதரவு குறையும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் அதிக நன்மை கிடைக்கும். அரசு வழியில் சில சிக்கல்கள் ஏற்படலாம். கணக்கு வழக்குகளை கச்சிதமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    மிதுன - குரு சஞ்சாரம்

    11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. உங்கள் ராசியில் குரு பார்வை பதிவதால் உடல்நலம் சீராகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்திப் பார்க்கும் நேரம் இது. உத்தியோகம், தொழிலில் நீங்கள் எதை சாதிக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை சாதித்துக் காட்டுவீர்கள். குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

    கடன் சுமை குறைய வழிபிறக்கும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் வந்திணைந்து உங்கள் சிக்கல்கள் தீர வழிகாட்டுவர். வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். துணி வும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 11-ம் இடத்தை குரு பார்ப்பதால், தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.

    குடும்பத்தில் உள்ளவர்களின் குறை களைத் தீர்க்க முன்வருவீர்கள். கடுமையாக முயற்சித்தும் நடக்காத பல காரியங்கள், இந்த காலகட்டத்தில் நடந்தேறும். பல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள், தனித்து இயங்கும் வாய்ப்பை பெறுவர். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாகக் கிடைக்காத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கும்.

    கும்ப - சனி சஞ்சாரம்

    வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 5, 9, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானங்கள் புனித மடைகின்றன. எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளின் வளர்ச்சி, பிரமிக்கும்படி இருக்கும். பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பர்.

    கடக - குரு சஞ்சாரம்

    வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். அங்கு 19.12.2025 வரை இருக்கும் அவர், உச்சம் பெற்று பலம் பெறுகிறார். அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இடம், பூமி வாங்கும் யோகம் வாய்க்கும். இல்லத்தில் மனதிற்கினிய நிகழ்வுகள் நடைபெறும். கடன் சுமை குறைய வழி பிறக்கும். கடமையை சிறப்பாகச் செய்து பாராட்டு பெறுவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீ காரம் கிடைக்கும்.

    குரு பார்க்க கோடி நன்மை என்பதால், உடல்நலம் சீராகும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். அசையாச் சொத்துகள் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. 'திருமண பாக்கியம் கைகூடவில்லையே' என்ற நீண்ட நாள் கவலை மாறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஆன்மிகப் பயணம் அதிகரிக்கும். உச்சரிக்கும் சொற்கள் நேர்மறையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் ராசிநாதனான குரு, சுபக்கிரகம் என்பதால், அது உங்களுக்கு நற்பலன்களை வழங்கும்.

    குருவின் வக்ர காலம்

    18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசி நாதன் வக்ரம் பெறுவதால், இந்த காலகட்டத்தில் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

    எதிரிகளின் பலம் கூடும். இக்காலத்தில் வியாழன் விரதமும், குரு வழிபாடும் இடையூறு சக்திகளை அகற்றும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும்.

    சனியின் வக்ர காலம்

    2.7.2025 முதல் 17.11.2025 வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறு கிறார். இக்காலத்தில் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் முடிவடையாமல் போகலாம். பணப் பிரச்சினை அதிகரிக்கும். பிள்ளைகளால் விரயங்கள் உண்டு. ஆரோக்கியத் தொல்லை மனதில் தளர்ச்சியை உருவாக்கும்.

    கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம். வரவை மிஞ்சிய செலவு, மனதை வாட்டும். ஊர் மாற்றம் திருப்தி தருவதாக அமையாது. சனி - செவ்வாய் பார்வை காலத்தில் தொழில் பிரச்சினையும், தன்னம்பிக்கை குறைவும் ஏற்படும்.

    ×