என் மலர்
தனுசு
வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை
14.12.2025 முதல் 20.12.2025 வரை
தனுசு
தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் நெருக்கடிகள் சற்று குறையும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும்.
வாக்கு வன்மையால், பண பலத்தால் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகர்களுக்கு மிகச் சாதகமான காலம். தொழில் முன்னேற்றம் மற்றும் உத்தியோக உயர்வில் சாதகமான பலன் உண்டு. அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். புத்திர பிரார்த்தம் உண்டாகும். மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும்.
வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். திருமணத்திற்கு வரன் தேடத் துவங்குவீர்கள். சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும். விவசாயிகள் உயர் ரக கறவை மாடு வாங்கி பயன் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






