என் மலர்tooltip icon

    தனுசு - வார பலன்கள்

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    28.11.2022 முதல் 4.12.2022 வரை

    வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். வெகு விரைவில் ஏழரைச் சனியில் இருந்து முழுமையாக விடுபடப் போவதால் அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும்.நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த தண்டனையில் இருந்து விடுபடுவீர்கள்.

    கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும். தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும்.  காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவார்கள். திருமணத் தடை அகலும்.

    பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    21.11.2022 முதல் 27.11.2022 வரை

    மேன்மையான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி, 4-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் உங்களது திறமைகளை உணர்வார்கள். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள்.

    தனாதிபதி சனி ஆட்சி பலம் பெற்று இருப்பதால் தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற நேரும். ஒரு சிலர் நாடு விட்டு நாடும் மாறலாம். விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச் சுமை உங்களை வாட்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

    திருமண யோகம் தாமதப்பட்டவர்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன, சொத்து யோகம் உண்டாகும். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    14.11.2022 முதல் 20.11.2022 வரை

    ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம். ராசிக்கு செவ்வாயின் எட்டாம் பார்வை கிடைப்பதால் திடீர் ஜாக்பாட் மூலம் பண வருமாய் அதிகரிக்கும். தடைபட்ட பணவரவு சீராகும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்தவர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள்.

    சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது.உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

    பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம். தொழிலில் பிறர் ஆச்சரியப்படும் வகையில் கணிசமான லாபம் கிடைக்கும். 14.11.2022 காலை 6.30 முதல் 16.11.2022 மாலை 6.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மனக் சஞ்சலத்தால் தாமதமாகும்.

    அன்றைய தினம் யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக்கூடாது.நன்மையும் தீமையும் கலந்த வாரமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். குரு கவசம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிப்பலன்

    7.11.2022 முதல் 13.11.2022 வரை

    தடைகள் தகரும் வாரம். குடும்ப ஸ்தானத்திலிருந்து சனி பகவான் மூன்றாமிடம் நோக்கி நகர்வதால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் சண்டை, சச்சரவு நீங்கும். இதுவரை நீடித்த பகையும், வருத்தமும் மாறும். தடைபட்ட திருமணம் நடந்து முடியும். பொறுப்பு மிக்க பதவிகள் தேடி வரும். ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். விவசாயிகள் உயர் ரக கறவை மாடு வாங்கி பயன் பெறுவீர்கள். கடன் தொல்லை ஒரு பக்கம் இருத்தாலும் மீளும் வகையான மார்க்கம் தென்படும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும்.கை விட்டு போன சொத்துக்கள் வீடு தேடி வர வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணைக்கு பணி நிரந்தரமாகும்.

    சிலரின் அரசு வேலை முயற்சி கை கொடுக்கும். ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கிரகணம் ஏற்படுகிறது. அஷ்டமாதிபதி சந்திரன் ராகுவுடன் இணைவதால் உங்கள் யோசனை, சிந்தனை, அறிவு, திட்டம் போன்றவை எதிர்மறையாகச் செயல்படும். பங்கு வர்த்தகத்தை தவிர்க்கவும். பிள்ளைகளை அரவணைத்து செல்லவும்.கண் சிகிச்சைக்கு உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிப்பலன்

    31.10.2022 முதல் 06.11.2022 வரை

    நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம். தன ஸ்தான அதிபதி சனிக்கு செவ்வாயின் பார்வை கிடைப்பதால் தொழிலில் நிரந்தர தன்மை உண்டாகும். திறமையும் செயல் வேகமும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் சீரான, சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.தன வரவு மட்டற்ற மகிழ்ச்சி தரும். ஏழரைச் சனியின் தாக்கம் முழுமையாக குறைவதால் ஊரைவிட்டு ஓடி தலைமறைவாக வாழ்ந்தவர்கள் காணாமல் போனவர்கள், கோபித்துக் கொண்டு சென்றவர்கள், அயல் நாட்டில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் இருந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.

    குடும்பத்தில் காரணமின்றி நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் தொல்லை குறையும். சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் சென்று குடிபுகுவீர்கள். அடமானச் சொத்து மற்றும் நகைகளை மீட்பீர்கள். மருமகனால் ஏற்பட்ட நிம்மதியின்மை சீராகும். 6,11-ம் அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதரர் வகையில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உண்டாகும். குச்சனூர் சென்று வரவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    24.10.2022 முதல் 30.10.2022 வரை

    மட்டற்ற மகிழ்சியோடு நல்ல மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் லாப அதிபதி சுக்ரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் பெறுவதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தேவைக்கு ஏற்ற பணம் கைமாற்றாக கிடைக்கும்.

    பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு, மனை, தோட்டம் வாங்கலாம்.பழுதான வாகனத்தை மாற்று வீர்கள். தங்கம் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பீர்கள். தொழில், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றி யைத் தரும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். பெரி யோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும்.

    சமூகத்தில் மதிப்பு மரியாதை கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதி கரிக்கும். மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்ப டைப்பார். உயர் அதிகாரிகள் பாராட்டி னாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். பெண்களுக்கு மன நிம்மதி யும், முன்னேற்றமும் உண்டாகும். சூரிய கிரகணத்தன்று நல்லெண்ணெய் தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    24.10.2022 முதல் 30.10.2022 வரை

    மட்டற்ற மகிழ்சியோடு நல்ல மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் லாப அதிபதி சுக்ரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் பெறுவதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தேவைக்கு ஏற்ற பணம் கைமாற்றாக கிடைக்கும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு, மனை, தோட்டம் வாங்கலாம்.

    பழுதான வாகனத்தை மாற்று வீர்கள். தங்கம் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பீர்கள். தொழில், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். உயர் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். சூரிய கிரகணத்தன்று நல்லெண்ணெய் தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிபலன்

    17.10.2022 முதல் 23.10.2022 வரை

    அனுகூலமான வாரம். 2 ,3-ம் அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் உங்கள் எண்ணங்கள், யோசனைகள், சிந்தனைகள் அனைத்தும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.புத்தி தெளிவு ஏற்பட்டு செயல்திறன் அதிகரிக்கும். வெகு விரைவில் ஏழரைச் சனியில் இருந்து முழுமையாக விடுபடுவதால் தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கூடிவரும்.

    தொழில் வகையில் அரசு அதிகாரிகளை அனுசரித்து ஆதாயம் பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. செவ்வாய், சனியை பார்ப்பதால் பூமி, மனையின் மதிப்பு கூடும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கூலித் தொழிலாளிகளுக்கு தீபாவளிச் செலவை சமாளிக்க தேவையான பணம் வேலை பார்க்கும் இடத்தின் மூலம் கிடைக்கும்.

    சிலருக்கு காது, மூக்கு, தொண்டை சற்று பிரச்சினை தரும். 17.10.2022 இரவு 10.28 முதல் 20.10.2022 காலை 10.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும். தீபாவளிக்கு பொருட்கள் வாங்கப் போகும் போது கவனம் தேவை. நவகிரகங்களில் குருபகவானை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    10.10.2022 முதல் 16.10.2022 வரை

    சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தும் வாரம்.சொத்து வாங்குவது, விற்பது, திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை குரு வக்ர நிவர்த்தி வரை ஒத்திப் போடவும். பத்தாம் இடத்தில் புதன், சூரியன், சுக்ரன் குருப் பார்வை இருப்பதால் முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையான புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். அதன் முலம் நல்ல வருவாயும் கிடைக்கும்.

    சாலையோர வியாபாரிகளுக்கு முதலீடு இரட்டிப்பு பலன் தரும்.பணம் பைகளில், கைகளில் நிரம்பி வழியும். ஆறாமிட செவ்வாயால் சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்த உகந்த நேரம். பெண்களுக்கு தீபாவளிக்கு தாய் வீட்டுச் சீரும் அழைப்பும் வரும்.

    தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள். தாய்க்கும் மூத்த சகோதரிக்கும் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். நெருங்கிய உறவில் திருமண முயற்சி கைகூடும். வீடு, மனை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை திக்கு முக்காடச் செய்யும்.வாரிசுகள் கல்வி, வேலை விசயமாக இடம் பெயர நேரும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    3.10.2022 முதல் 9.10.2022 வரை

    ஏழரை சனியின் ஆதிக்கம் குறையும் காலம். ராசி அதிபதி குருவை லாப அதிபதி சுக்ரன் பாக்கிய அதிபதி சூரியன் மற்றும் தொழில் ஸ்தான அதிபதி புதன் பார்ப்பதால் புதிய தொழில் முதலீட்டிற்கு ஏற்ற நேரம். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பா ராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள் அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். சேமிப்பு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும்.

    சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.மூகாம்பிகையை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    26.9.2022 முதல் 2.10.2022 வரை

    தடைபட்ட அனைத்து இன்பங்களும் கூடி வரும் வாரம். ராசி அதிபதி குருவிற்கு சனியின் 3ம் பார்வை இருப்பது தர்ம கர்மாதிபதி யோகம். அத்துடன் பாக்கிய அதிபதி சூரியன், 7, 10-ம் அதிபதி புதன், 6,11-ம் அதிபதி சுக்ரன் ராசி அதிபதி குருவை பார்ப்பதால் தர்ம கர்மாதிபதி யோகம் சுப பலனை இரட்டிப்பாக வழங்கப் போகிறது.

    குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். கமிஷன் அடிப்படை தொழில் புரிபவர்களுக்கு அதிகமான நன்மைகள் உண்டு.ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார். சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்ய நேரும். திருமணக் கனவு நினைவாகும்.

    குழந்தை பாக்கியம் கிட்டும்.வீடு,மனை, வாகன யோகம் உண்டு.புதிய வீடு கட்டலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். அதற்கு தேவையான கடன் உதவி கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். ஆஞ்சநேயர் வழிபாடு முன்னேற்றத்தை அதிகரிக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    19.9.2022 முதல் 25.9.2022 வரை

    சிறிய முயற்சியில் பெரிய வெற்றி பெரும் வாரம். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரும். சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். பரம்பரை சொந்தத் தொழிலின் முழுப்பொறுப்பையும் தந்தை உங்களிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்கத் துவங்குவார்.

    2-ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சாத்தியமற்ற விசயத்திற்கு யாருக்கும் வாக்கு கொடுத்து வம்பில் மாட்டக்கூடாது. பேச்சை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் நிதானமாக சிந்தித்து பேச வேண்டும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். பெண்கள் மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம்.

    20.9.2022 அன்று மதியம் 2.23 முதல் 23. 9.2022 அன்று மதியம் 2.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் வாங்குவதையும் கொடுப்ப தையும் தவிர்க்க வேண்டும். அமாவாசையன்று பசுவிற்கு அகத்திக் கீரை தானம் தரவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×