என் மலர்tooltip icon

    மீனம்

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    எண்ணம் போல் வாழ்க்கை அமையப் போகும் வாரம். இன்னும் சில நாட்களில் ராசியை விட்டு ராகு பகவான் விலகப் போகிறார். ராசியில் ராகு நின்றதால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டாகும்.

    இழந்த இன்பங்களை மீட்டுப் பெறப் போகிறீர்கள். தொட்டது துலங்கும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஏற்படும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.

    கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தடைபட்ட கட்டுமானப் பணிகள் துரிதமடையும். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிலர் ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைக்கலாம். திருமண முயற்சிகள் காலதாமதமாகலாம். தினமும் குரு கவசம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×