என் மலர்tooltip icon

    மீனம்

    வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை

    14.9.2025 முதல் 20.9.2025 வரை

    மாற்றங்கள் உண்டாகும் வாரம். தன ஸ்தான அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்க்கிறார். தற்பொழுது உங்கள் நிலையில் உயர்வு உண்டாகும். லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபிவிருத்தி உண்டாகும். வெளி வட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும்.

    திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆடம்பர, தேவைகள் நிறைவேறும். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்க வாய்ப்பு உள்ளது. பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளு படியாகி தீர்ப்பு சாதகமாகும்.

    பெண்களின் திறமைகள் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பிரமிக்க வைப்பதாக இருக்கும். தந்தை வழியில் நிலவிய பிரச்சினைகள், சங்கடங்கள் விலகி ஆதரவு கிடைக்கும். மகாளய பட்ச காலத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் வழங்க குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×