என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
மன அமைதி கிடைக்கும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். பிள்ளைகள் தங்கள் சாதனைகளால் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய தொழில் தொடர்புகள் கிடைக்கும். வேலை, வியாபாரம், தொழில் அபிவிருத்தி போன்றவற்றிற்கு அலைச்சலான பயணமும் செலவுகளும் செய்ய நேரும்.
விளையாட்டு, காவல் துறையினரின் திறமை பாராட்டப்படும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை பூர்வீகச் சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விசயத்திற்காக கோபத்துடன் மன இறுக்கத்துடன் இருப்பார். தந்தையின் ஆரோக்கியத்திற்காக விட்டுக் கொடுக்க முயற்சிப்பீர்கள். குடும்பப் பிரச்சினைகளை தம்பதிகள் தங்களுக்குள் பேசி சீராக்குவார்கள். வாழ்க்கைத் துணை அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருப்பார். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். ஆடி அமாவாசையன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். வக்ரம் பெற்ற 3,8-ம் அதிபதி சுக்ரன் 6-ம் அதிபதி சூரியனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு கேதுவின் மையப்புள்ளியில் சேர்க்கை பெறுவதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும். சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வாங்கும் எண்ணம் தோன்றும். ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கிக்கொள்ள நேரும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் முறையான ஆவணம் இன்மையால் தடைபடும். அண்டை அயலாருடன் சொத்து தொடர்பான எல்லைத் தகராறு உண்டாகும்.
உயர் அதிகாரிகளால் சில சங்கடங்கள் நிலவும். அதனால் வேலை மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும். சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும். தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும். அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கக் கூடாது. உடல் நலனில் அக்கறை தேவை. ஆடி வெள்ளிக்கிழமை ஆதி பராசக்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
தடைகள் அகலும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாயின் 8ம் பார்வை ராசியில் பதிவதால் தந்தையின் கடன் மற்றும் பூர்வீக சொத்தால் நொந்த உங்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. தந்தை- மகன் உறவு சிறக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது சாதகமான காலம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கள் அகலும்.
வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். விரய அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் பெரும் விரயம் ஏற்படாது. வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதானமாக செயல்பட்டால் கடன் இல்லாமல் சமாளிக்க முடியும். பேஸ்புக் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய நட்பால் சில சங்கடங்கள் நேரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. ஆடிப்பெருக்கன்று கடலில் நீராடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாயின் 8ம் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் திடீர் அதிர்ஷ்டமும் சுப விரயமும் ஏற்படும். அதிர்ஷ்ட பணம் உயில் சொத்து கிடைக்க வாய்ப்பு கள் உள்ளது. குடும்பத்தில் கடந்த கால நிகழ்வுகளால் நிலவிய மனக்கசப்புகள் மறையும். தொழில் துறை, வேலை உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் திட்டங்களும் நிறைவேறும்.
சிலருக்கு வேலையில் மாற்றம் உண்டாகும்.வெளிநாடு முயற்சியில் முன்னேற்றம் உண்டு. சில ரியல் எஸ்டேட் தாரர்களுக்கு அரசுத் துறை நிறு வனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதமான பதில் வரும். செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் ஆண்களும், பெண்களும் அளவாகப் பழகுவது நல்லது.
25.7.2023 அன்று இரவு 11.13 முதல் 27.7.2023 இரவு 7.29 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க நேரும். குழப்பமான மனநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். அம்மனுக்கு மஞ்சள் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் 6-ம்மிடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். கடன்பிரச்சினைகள் உண்டாகும். அல்லது விண்ணப்பித்த கடன் கிடைக்கும்.அரசு ஊழியர்களுக்குக் அதிகாரமிக்க உயர்பதவிகள் கிடைக்கும். சிலருக்குக் கவுரவப் பட்டங்கள் கிடைக்கும்.
நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலையை விட்டுவிடும் எண்ணம் தோன்றும். பூர்வீக சொத்து சம்பந்தமாக உங்களுக்கும் சகோதரருக்கும் சலசலப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
வாழ்க்கைத் துணை, வியாபார பங்குதாரரிடம் அனுசரித்து செல்ல வேண்டிய காலம்.தடைபட்ட புத்திர பிராப்தம் சித்திக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் குறையும். சில சங்கடங்கள் நிலவினாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும். ஆடி மாதம் புனித நதிகளில் நீராடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாயின் 8ம் பார்வை ராசி யில் பதிவதால் விபரீத ராஜ யோகம் உண்டாகும்.திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. யார் அக்கவுண்டிலோ ஏற வேண்டிய பணம்உங்கள் அக்கவுண்டில் ஏறும்.அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்களைக் கூட அதிர்ஷ்டம் விரும்பும்.
மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பீர்கள். மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 6-ம்மிட சுக்ரன் செவ்வாயால் இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு.
எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.அமாவாசையன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் வாரம். 2 , 9ம் அதிபதிக்கு குருப் பார்வை கிடைப்பதால் குரு மங்கள யோகம் ஏற்படுவதால் தங்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மருமகன் மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார்.
குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். வார ஆரம்பத்தில் சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும். தந்தை வழிச் சொத்துப் பிரச்சினைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும்.
குடிப்பழக்கம், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள்ம ருத்துவத்தில் சீராக வாய்ப்பு உள்ளது. கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். தினமும் நடராஜரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
ஏற்றம், இறக்கம் நிறைந்த வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாய் 6-ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்வதால் பொருளாதாரத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டு. சிறிய தடை தாமதங்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம் உரிய நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும். கடன் பெற்று சொத்து ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
6-ம் அதிபதி சூரியன் 4, 7-ம் அதிபதி புதனுடன் சேர்ந்து சுக ஸ்தானத்தில் நிற்பதால் முக்கிய பணத் தேவைக்கு மீட்டர் வட்டி, கந்து வட்டி போடும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறாமல் வங்கிகளில் கடன் பெறுவது பாதுகாப்பு தரும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
28.6.2023 அதிகாலை 3.27 முதல் 30.6.2023 காலை 10.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சுலபமாக முடிக்க வேண்டிய செயல்களில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். ஞாபக மறதி மற்றும் மனச் சோர்வு மிகுதியாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
ஆதாயம் நிறைந்த வாரம். குடும்ப ஸ்தானத்திற்கு சனியின் தாக்கம் குறைவதால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப்புள்ளியாகும். வீண் விரயங்கள் குறையும்.அதிக முதலீடு செய்ய வேண்டிய புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சில்லரை வணிகர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம்.
வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய சொந்த தொழில் எண்ணம் தோன்றும். பிள்ளை களின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். வைத்தியச் செலவு குறையும். சிலர் உடன் பிறப்புகளுக்காக சொத்தை விட்டுக் கொடுப்பார்கள். சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.
எதிர்பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். வீடு, வாகனம், வயல்வெளி, தோட்டம் வாங்கும் யோகம் உள்ளது. கணவன், மனைவி குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் நிலவும். மனக் கவலைகள் அகலும். சிவ, சக்தியை வழிபட வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
12.6.2023 முதல் 18.6.2023 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு 5-ம் இடத்தில் சுக்ரன், செவ்வாய் சேர்க்கை இருப்பதால் வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.பங்கு வர்த்தகத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான சூழல் உண்டாகும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் கிடைக்கும்.
அடமான நகைகள் மீண்டு வரும். இதுவரை தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். கணவர் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தாய் வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். 6-ம் அதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் நிற்பதால் கடன் பெற்று அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.
சிலருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும்.சிலர் சகோதர, சகோதரி களுக்காக பணம் செலவு செய்ய நேரும். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
5.6.2023 முதல் 11.6.2023 வரை
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். வியாபாரம் பெருகும். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள்.
நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். திருமணத்தடை அகலும். வீடு வாகனம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.
மாமியாரின் பாராட்டு, தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும்.எந்த செயலிலும் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
29.5.2023 முதல் 4.6.2023 வரை
குடும்பத்தில் குழப்பம் நீங்கி நன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி குரு தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் தொழிலுக்கு தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீர்கள்.உறவினர் மத்தியில் மரியாதை கூடும். 6-ம் அதிபதி சூரியன் 3ம்மிடத்தில் இருப்பதால் திறமையான வேலையாட்கள் கிடைபார்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.தற்போது விரயத்தில் சனி இருப்பதால்எதையும் யோசிக்காமல் புதிய சொத்துக்கள் வாங்கிப் போடுவது உத்தமம். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும்.பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். தந்தையின் அன்பும், ஆசீர்வாதமும் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
31.5.2023 அன்று மாலை 6.30 முதல் 3.6.2023 12.28 மணி மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். பவுர்ணமியன்று திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






