என் மலர்tooltip icon

    மீனம் - வார பலன்கள்

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    13.11.2023 முதல் 19.11.2023 வரை

    முன்னேற்றமான வாரம். 2,9ம் அதிபதி செவ்வாய் சனி பார்வையில் ஆட்சி பலம் பெறுவதால் பாக்கிய பலம் அதிகரிக்கும். இறையருள் பரிபூரணமாக கிட்டும்.குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். இது வரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் விலகும். அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும். வாரிசுகளின் இடமாற்றம் நிம்மதி தரும். ராசியில் ராகு இருப்பதால் விரக்தி மிகுதியாகும்.குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும்.தடைபட்ட பாகப் பிரிவினை சொத்து ,பணம் வரும்.

    அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி உறவில் அன்பு மிளிரும் 13.11.2023 இரவு 9.17 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத எண்ணங்கள் நிறைவேறாத செயலில் முயற்சியை உண்டாக்கி மன சஞ்சலத்தையும் அமைதியற்ற நிலையையும் ஏற்படுத்துவார். உடல் நலத்தை பாதுகாக்கவும். சஷ்டி திதியில் திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    6.11.2023 முதல் 12.11.2023 வரை

    பொருளாதார பற்றாக்குறை அகலும் வாரம்.ராசியில் உள்ள ராகு புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற லவுகீக இன்பங்களில் ஆர்வத்தை அதிகரிப்பார். ஏழில் உள்ள கேது உங்களின் செயல்பாடுகள் எண்ணங்களை சுத்தப்படுத்துவார். தொழில் பங்குதாரர், கூட்டாளிகளை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று அனைத்து பணிகளையும் கவனிக்க வேண்டிய நேரம். தொழில் வளம் பெருகி செல்வச் செழிப்பு ஏற்படும். மிகுதியான சுபவிரயம் உண்டாகும். எளிதாக பணம் கிடைக்கிறது என்பதற்காக குறுக்கு வழியை தேடக்கூடாது.உங்களின் திட்ட வட்டமான, தீர்க்கமான வழி நடத்தல் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத்தரும்.

    குடும்பத்தாரின் தேவையை குறிப்பறிந்து நிறைவேற்றுவீர்கள். உடலும் உள்ளமும் குளிரும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். இனிமையான வாழ்க்கை அமையாதா என்று ஆதங்கம் அடைந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணத் தடை விலகும். 11.11.2023 மதியம் 1 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வெளியூர் பயணம், வெளி உணவு களைத் தவிர்க்கவும். தீபாவளியன்று கஜலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    30.10.2023 முதல் 5.11.2023 வரை

    சத்ருக்கள் தொல்லை அகலும் வாரம். 6-ம் அதிபதி சூரியன் 8-ல் மறைகிறார். ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் மறைவது விபரீத ராஜ யோகம்.என்றோ வாங்கி வைத்த பங்குகளின் மூலம் கணிசமான ஆதாயம் உண்டாகும். லாபத்தை மறுமுதலீடாக்கி புதிய பங்குகளை வாங்குவீர்கள். பெண்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். ராசியில் ராகு 7-ல் கேது.குடும்பத்தில் சிறு மனக்கசப்பு உண்டாகும்.கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடை ஏற்படலாம்.கற்பனை கவலைகள் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். அதிர்ஷ்டத்தைத் தேடி அலைபவர்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றால் வெற்றி பெரும் சூட்சமத்தை ராகு கேதுக்கள் கற்றுக் கொடுப்பார்கள்.

    அயல் நாட்டில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் இருந்தவர்கள் வீடு திரும்புவர்கள். வாடைக வீட்டுப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். சிலருக்கு நல்ல வாடகை வீடு கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் அன்பும், ஆதரவும் நிம்மதியை அதிகரிக்கும். நவகிரக குருவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    23.10.2023 முதல் 29.10.2023 வரை

    சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டா கும் வாரம். ராசிக்குள் ராகுவும். ஏழில் கேதுவும் நுழைகிறார்கள். வேற்று மத இன நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குறுக்கு வழியில் முன்னேறும் எண்ணம் மிகுதியாகும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தீபாவளி ஆபரில் வாங்குவதால் சுப விரயங்கள் அதிகமாகும்.முக்கிய முடிவுகளை எடுப்பதில் மன தடுமாற்றம் ஏற்படலாம்.கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படலாம்.நண்பர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும்.வீண் அலைச்சல் தூக்கமின்மை அதி கரிக்கும். உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்ப்பீர்கள்.

    வியாபாரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள். தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். தொழில் உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும்.திருமண முயற்சிகள் இழுத்தடிக்கும். கண் திருஷ்டி, போட்டி,பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். சுப பலனை அதிகரிக்க ஆஞ்சநேயரை 11 முறை வலம் வந்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    16.10.2023 முதல் 22.10.2023 வரை

    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். 6-ம் அதிபதி சூரியன் 8-ம் அதிபதி சுக்ரன் பரிவர்த்தனை. 6-ம் அதிபதி சூரியன் நீசம். குறைந்த உழைப்பில் நிறைந்த வருமானம் கிடைக்கும். பொருள் வரவு, அதிர்ஷ்டத்தை மிகைப்படுத்தும். கடன் சுமை குறையும். உடல் நலம் வைத்தியத்தில் சீராகும்.வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது பற்றி திட்டமிடுவீர்கள். பத்திரப் பதிவு சுமூகமாகும்.சொத்துக்களின் மதிப்பு உயரும். இழப்புகளை ஈடு செய்யக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிட்டும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும்.

    ராசிக்குள் ராகுவும் ஏழாமிடத்தில் கேதுவும் நுழைவதால் சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணத்திற்கு வரன் அமையும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இனிமை தரும் இடமாற்றங்களை சந்திப்பீர்கள். 17.10.2023 மதியம் 2.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஒத்தி வைக்கவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாழக்கிழமை நவகிரக குருவை வழிபட மேன்மை உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிபலன்

    9.10.2023 முதல் 15.10.2023 வரை

    நிதானம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய வாரம்.மாத இறுதியில் ராசிக்குள் ராகுவும் ஏழாமிடத்தில் கேதுவும் நுழைகிறார்கள். அதன் தாக்கம் வெளிப்படத் துவங்கும். எனவே வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினருடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் கவனமாக நடந்து கொள்ளவும். ஒரு சிலருக்கு தகுதிக்கு மீறிய வேலையால் அவதி உண்டாகும். வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.ஏழரைச் சனியின் காலம் என்பதால் தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. தொழில் போட்டிகள் எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். தம்பதிகள் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். திருமண முயற்சிகள் இழுத்தடிக்கும். குடும்பத்தில் இதுவரை தடைபட்ட சுப காரியங்கள் துரிதமாகும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் இழுபறியாகும். 15.10. 2023 காலை 5.20- மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தேவையற்ற அலைச்சல்களால் விரயங்கள் ஏற்படலாம். வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். மகாளய அமாவாசையன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழியடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    2.10.2023 முதல் 8.10.2023 வரை

    சகாயமான வாரம். ராசி அதிபதி குருவை செவ்வாய் பார்ப்பதால் உங்கள் முயற்சி, எண்ணங்கள் நிறைவேறும். தன வரவு சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் மன நிறைவு உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு தொழில் அல்லது வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் விறுவிறுப்பாக நடைபெறும். வசூலாகாத பணம் வசூலாகும். குடும்ப நிலை உயரும். சிலருக்கு குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குடும்ப உறவுகள் உங்கள் மேல் அன்பை பொழிவார்கள். குடும்ப ஒற்றுமையை சிதைத்த எதிரிகள் இருந்த இடம் தெரியாது. பெண்களுக்கு கணவன் மற்றும் புகுந்த வீட்டினரின் ஆதரவு மகழ்ச்சி தரும்.வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். திருமணத் தடை அகலும். வசதியான வாழ்க்கைத் துணை அமையும். நோய் தொல்லை வைத்தியத்தில் மட்டுப்படும்.இந்த வாரத்தில் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் அற்புதமாக நிறைவாக நடக்கும். மகாளய பட்ச காலத்தில் தாத்தா, பாட்டியின் நல்லாசிகள் பெறுவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசிபலன்

    25.9.2023 முதல் 1.10.2023 வரை

    புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். 2 , 9ம் அதிபதி செவ்வாயின் பார்வை ராசியில் பதிவதால் உங்கள் வாக்குத் திறமையால் லாபம் ஈட்டுவீர்கள். பணத்தட்டுபாடு சீராகும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு அரசுத் துறை அல்லது அறநிலையத் துறை சார்ந்த பொறுப்புகள் கிடைக்கும். உடன் பிறப்புகளால் ஏற்பட்ட மனக் கசப்பு சுமுகமாகும். திருமணப் பேச்சு வார்த்தை சிறு தடங்களுக்கு பிறகு சீராகும். ராசியை 6ம் அதிபதி சூரியன் செவ்வாயுடன் இணைந்து பார்ப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். தாய்மாமாவுடன் சிறு மனபேதம் உண்டாகும். சிலரின் மறுமண முயற்சிகள் பலிதமாகும். சிலர் வீடு பழுது பார்க்கலாம். சிலருக்கு வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இடப் பெயர்ச்சி உண்டாகும். வேலைப் பளுவால் உடல் அசதி இருக்கும். சிலருக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் மன தடுமாற்றம் ஏற்படலாம். மகாளயபட்ச காலத்தில் அந்தணர்கள் சாதுக்களின் தேவையறிந்து உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    18.9.2023 முதல் 24.9.2023 வரை

    எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். 2,9-ம் அதிபதி. செவ்வாய் ராசியைப் பார்ப்பதால். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.உறவுகளுக்கிடையே உறவு நிலை மேம்படும்.தாயிடம் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். வெளி வட்டாரங்களில் மரியாதைகள் உயரும். திடீர் யோகத்தால் எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடை பெறும். கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள். திருமண விசயம் சாதகமாகும். 20.9.2023 அன்று காலை 8.45 வரை சந்திராஷ்மம் இருப்பதால் மனச்சோர்வு மிகுதியாக இருக்கும். உணவு கட்டுப்பாடு தேவை. நாளும் சுப பலன்களை அதிகரிக்க, தினமும் பால முருகனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    11.9.2023 முதல் 17.9.2023 வரை

    பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வாரம். ராசியை செவ்வாய் பார்ப்பதால் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும்.புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். அஷ்டமாதிபதி சுக்கிரன் 5ம்மிடத்தில் பலம் பெறுவதால் பெண்களால் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு.அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு.நாணயம் நீடிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும்.பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். அரசிடமிருந்த வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும்.சில சமூக ஆர்வலர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும்.வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    4.9.2023 முதல் 10.9.2023 வரை

    சாதகமும் பாதகமும் கலந்த வாரம். ராசி, 10-ம் அதிபதி குரு தன ஸ்தானத்தில் வக்ரமடைவதால் தொழிலை மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும்.தொழிலில் போட்டி பொறாமைகளை சமாளிக்க பழக வேண்டும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கடுமையாக உழைக்க நேரும். திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் வெற்றி வாகை சூடுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.5-ம்மிடத்தில் அஷ்டமாதிபதி சுக்ரன் நிற்பதால் பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளவது சற்று கடினமாக இருக்கும்.பெண்களுக்கு தாய் வழிச் சொத்து தேடி வரும். தம்பதிகளிடையே அவ்வப்போது வாக்குவாதம் தோன்றி மறையும். வெளிநாட்டு பயணத் திட்டம் கைகூடும்.அடிக்கடி பிராயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவும்.உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம்.வரன் பார்த்துச் சென்றவர்களின் முடிவு சாதகமாக இருக்கும். கால பைரவரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிபலன்

    28.8.2023 முதல் 3.9.2023 வரை

    தொட்டது துலங்கும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் தந்தை வழிப் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.வீடு வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு போன்ற எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும். சிலருக்கு இடப் பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும். குருபகவான் தற்போது தன ஸ்தானத்தில் நிற்பதால் பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். பாக்கிகள் வசூலாகும். சம்பள பாக்கி கிடைக்கும். சேமிப்புகள் அதிகமாகும். தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும். தம்பதிகளின் கருத்து வேறுபாடு குறையும்.உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகப் போகிறது. ராசிக்குள் அக்டோபர் 30ல் ராகு உள்ளே நுழையும் முன்பு திருமணத்தை நடத்துவது நல்லது.மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். உடல் நிலை தேறும். பிரதோஷத்தன்று பச்சரிசி மாவினால் சிவன், நந்திக்கு அபிசேகம் செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×