என் மலர்

  மீனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  வார ராசி பலன்கள்

  இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை

  சகாயமான வாரம். முயற்சி ஸ்தான அதிபதி சுக்ரன் 3ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்றதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமும் துணிச்சலும் மேலோங்கும். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும்.வழக்குகளின் வெற்றி செய்தி கிட்டும். நீண்ட நாள் மனக்குறைகள் விலகும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.

  நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்க ஏற்ற வாரம். நீண்ட காலமாக திருமண தடையை சந்தித்தவர்களுக்கு திருமணம் நிச்சயமாகிவிடும். வீட்டில்ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். எதிர் பாலின வழிப் பிரச்சினைகள் குறையும்.

  புத்திர பிராப்தம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சமுதாய மதிப்பு மரியாதை உயரும்.

  அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளின் திரும்ண வாழ்வு மேலும் சிறப்படையும். ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதி சூரியன் 4ம் இடமான சுக ஸ்தானத்தில் இருப்பதால் போதிய ஓய்வு, உறக்கம் இருந்தாலும் ஏதாவது ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்குசிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபடவும்

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×