என் மலர்
மீனம்
இந்த வார ராசிப்பலன்
18-7-2022 முதல் 24-7-2022 வரை
வளமான பலன்களைப் பெறும் வாரம். ராசி அதிபதி குருவிற்கு சனி பார்வை இருப்பதால் தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி சீராகும். இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். கடனால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும்.
மாதச் சம்பளதாரர்களுக்கு தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் தீரும்.வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள். தங்களை மாய்த்துக் கொள்ள துணிந்தவர்கள் கூட மனம் மாறுவார்கள். தொழிலில் இருந்த தடைகள் மெதுவாக விலகி மறுபடியும் துளிர்க்கும்.ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும்.பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.
நிலுவையில் உள்ள சம்பளபாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். சிலர் வாரிசுகளை தங்களின் தொழில், வியாபாரத்தில் ஈடுபடுத்தி ஆனந்தம் அடைவார்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். சித்தர்களின் வழிபாட்டு தலங்களில் உலவாரப்பணியில் ஈடுபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406