என் மலர்tooltip icon

    துலாம்

    வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை

    23.11.2025 முதல் 29.11.2025 வரை

    துலாம்

    புத்தி தெளிவு ஏற்பட்டு செயல்திறன் அதிகரிக்கும் வாரம். ராசியில் வக்ர நிவர்த்தி பெற்ற புதன் உள்ளார். புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத் தேவைகளுக்கு இப்பொழுதே சேமிப்பீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். சுய தொழில் பற்றிய ஆர்வம், எண்ணம் அதிகரிக்கும்.

    திருமண முயற்சி சாதகமாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் வருந்தியவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால் நல்ல பலனை அடைய முடியும். கணவன் மனைவி கருத்தொற்றுமை சிறப்படையும்.

    பிள்ளைகளிடம் இருந்து எதிர்பாராத அன்பு பரிசு கிடைக்கும். எட்டாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. ஜாமின் போடக்கூடாது. தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மகாலட்சுமி வழிபாட்டால் அபிவிருத்தி பெற முடியும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×