என் மலர்
துலாம் - வார பலன்கள்
துலாம்
30.3.2025 முதல் 05.4.2025 வரை
நன்மை நிறைந்த வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்பதால் மனம் நிம்மதியாக இருக்கும். சிலருக்கு புதிய தொழில் சிந்தனைகள் மேலோங்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். அடமான நகைகளை மீட்பீர்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பழைய வாகனத்தை எக்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
நன்மைகளே மிகுதியாக நடக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். திருமணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும். நண்பர்களிடம் நிதானம் வேண்டும். உங்கள் திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். இடப் பெயர்ச்சியால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். வயது முதிர்ந்தவர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும்.
1.4.2025 அன்று மாலை 4.30 மணி முதல் 3.4.2025 அன்று மாலை 6.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். சனிக்கிழமை பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம்.ராசிக்கு 6ல் 6 கிரக இணைவு. வேதனைகளை சாதனைகளாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும். தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். புதிய சொத்துக்கள் சேரும். பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும்.தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். கடனால் பட்ட அவமானம், அசிங்கம் மறையும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலை மாறும்.
அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் இழுபறியாகும். சில கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம். திருமண முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். மகிழ்ச்சியை அதிகரிக்க அமாவாசையன்று காலபைரவருக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
தொட்டது துலங்கும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் 6-ல் உச்சம். சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும். இது எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடிய அமைப்பாகும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.பெண்களுக்கு ஆபரணங்கள் சேரும். ஆண்களுக்கு மனைவியால் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் கைகூடும்.சிலர் வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் பெறலாம்.
நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதக மாகும். முன்னோர்களின் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். பங்கு மார்க்கெட் கை கொடுக்கும். பண பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண முயற்சி வெற்றி தரும். காவல் துறையினர், அரசியல்வாதிகள், விவசாயிகளுக்கு சாதகமான பலன் உண்டு. தம்பதிகளுக்குள் கருத்துவேறுபாடு மறையும். தினமும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படித்து வர அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசிக்கு ஆறாம் இடத்தில் நான்கு கிரகச் சேர்க்கை.நடக்குமா? நடக்காதா? என கேள்விக்குறியாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு இனிய முறையில் திருப்பு முனையாக மாறும். வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். உங்களை தவறாக வழி நடத்திய கெட்ட நண்பர்கள் விட்டு விலகுவார்கள்.தொழிலில் ஏற்றமும், மேன்மையும் உண்டாகும்.அதற்கு தேவையான தொழில் கடனும் கிடைக்கும்.ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும்.
குறிப்பாக மருத்துவத் துறை படிப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். சிலர் குடியிறுப்பை மாற்றம் செய்யலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் அதிகரிக்கும். சிலர் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை தவணை முறையில் வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு சுப செலவு செய்து மகிழ்வீர்கள். ஸ்ரீ ராமரை வழிபட சங்கடங்கள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும். மாசி மகத்தன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
விரும்பிய கடன் தொகை கிடைக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வக்ரம். பெற்று 3 , 6ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் பலம் பெறுகிறது. புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும்.
கடனால் சுணங்கிய தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் தென்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற வம்பு, வழக்கை தவிர்த்தல் நலம். சுக்ரன் மீனத்தை கடக்கும் வரை கடன், ஜாமீன் போன்ற விசயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த காலகட்டத்தில் எந்த விதமான கடனுக்கு முயற்சி செய்தாலும் நிச்சயம் கைகூடும். குறிப்பாக எதிர்பார்த்த தொழில் விரிவாக்க கடன், வீட்டு கடன் கிடைக்கும். அடமானத்திலிருக்கும் வீட்டை, நகையை மீட்க தேவையான பண உதவி கிடைக்கும்.
பெண்களுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும். சிலருக்கு மறுமணம் வாய்ப்பு உண்டாகும் 5.3.2025 காலை 8.13 முதல் 7.3.2025 அன்று காலை 11.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பமும், பதட்டமும் அதிகரிக்கும். லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
சாதகமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் 3,6-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை செய்து 2,7-ம் அதிபதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். கோட்சார கிரகங்கள் ஓரளவு சாதகமாக உள்ளது. அன்றாட செயல்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும் அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகமாகும்.
சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் உங்கள் பேச்சிற்கு குடும்ப உறுப்பினர்கள் மதிப்பு கொடுப்பார்கள்.
பிறரை அண்டி பிழைத்த நிலை மாறும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சியில் சாதகமான பலன் எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் தகுதிக்கேற்ற பணி கிடைக்கும். பார்த்துச் சென்ற வரனிடமிருந்து சாதகமான பதில் வரும்.
தம்பதிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளையும் அவசியமற்ற கடனையும் குறைப்பது நல்லது. சிவராத்திரியன்று வெண்மை நிற மலரை அணிவித்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
இழுபறிகள் குறையும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சம். தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வர்த்தகம் லாபத்துடன் நடக்கும். அதிர்ஷ்டசாலியாக திகழ்வீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப் பிரிவினை பங்கு சொத்தாகவோ, பணமாகவோ முழுமையாக வந்து சேரும்.
சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சிலருக்கு மனைவி வழி சொத்தில் மாமனாருடன் நிலவிய கருத்து வேறுபாடு மாறும். தடைபட்ட வெளிநாட்டு பயணம், வேலை வாய்ப்பு கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். பெண்களுக்கு உயர்ரக ஆடம்பர ஆடை, பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரரால் சகாயங்கள் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான மாற்றங்கள் உண்டாகும்.
ஊடகங்களில் பணிபுரிபவர்களின் தனித் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு விருப்ப திருமணம் நடைபெறும். ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும்.வியாழக்கிழமை நவக்கிரக குரு பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு 6-ல் ராசி அதிபதி சுக்ரன் ராகுவுடன் இணைந்து உச்சம் பெறுகிறார். அவரே அஷ்டமாதிபதியாகி ராசிக்கு 6-ல் உச்சம் பெறுவது சுபித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. முக்கிய தேவைகளுக்கு அரசுடமை வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்க வேண்டும். அருகில் உள்ள வட்டி கடையில் வைக்க கூடாது. சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குறுக்கு சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கை யாளர்கள், களத்திரம் மூலம் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரி களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.தாராள தன வரவு உண்டாகி குடும்பத்தில் இன்பம் பெருகும்.தைப்பூசத்தன்று கலச பூஜை செய்து முருகனை வழிபட குடத்தில் இட்ட விளக்காக உள்ள உங்கள் வாழ்க்கை . குன்றின் மேல் ஏற்றிய விளக்காக பிரகாசிக்கத் துவங்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
மனக் குறைகள் நீங்கும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் 3, 6-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார்.தொழிலில் வெற்றி நடை போடுவீர்கள்.மதிப்பும், மரியாதையும் உயரும்.உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பணத்திற்காக பிறரை அண்டிப் பிழைத்த நிலை மாறும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினை குறையும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்கும் வாய்ப்பு உள்ளது.இனிமை தரும் இடமாற்றங்கள் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிய சிலர் மீண்டும் சொந்த மண்ணில் குடியேறும் வாய்ப்பு உள்ளது. அடிப்படை வசதி பெருகும்.
வாழ்க்கைத் துணை மூலம் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.பொதுக் காரியங்களில் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு மறுமணம் நடக்கும். குல தெய்வ அனுகிரகம் சிடைக்கும். 6.2.2025 அன்று இரவு 2.16 மணி முதல் 8.2.2025 அன்று காலை 6.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படவும்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.வெள்ளிக்கிழமை கோ பூஜை செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
மனப் போராட்டம் அகலும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்ரன் 3, 6-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார்கள்.இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனிபோல் விலகும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார். புதிய முயற்சிகளில் முழுமையான வெற்றிகள் உண்டாகும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும். சுபச் செலவிற்காக கடன் பெற நேரலாம்.
பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மன சங்கடம் தீரும். திருமண முயற்சிகள் சித்திக்கும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தால் குடும்பத்துடன் இணைவார்கள். ஊழியர்களுக்கு உயர் அதிகரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வெளிநாட்டுப் பயணத்தில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். தேவைக்கேற்ற வருமானம் இருந்தாலும் வரவிற்கு மீறிய செலவும் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கலாம். தை அமாவாசையன்று உணவு தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை
19.1.2025 முதல் 25.1.2025 வரை
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் தனாதிபதி செவ்வாயின் சஞ்சாரம். ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் ஒருங்கே வலிமை பெறுகிறது.இதனால் தன யோகம் சிறப்பாக அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல முறையில் கர்ப்பம் உண்டாகும். தந்தை மகன் உறவில் பாசமும் மனநிறைவும் உண்டாகும். குல தெய்வ அருளால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் சிக்கல்கள் தீரும். செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் முதலீடுகளை அதிகரிக்க முடியும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். திருமண முயற்சி விரைவில் பலிதமாகும். பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள்.தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் அதிகரிக்கும்.மைத்துனரால் ஏற்பட்ட மன சங்கடம் தீரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் துவங்குவீர்கள். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும். முருகப் பெருமானின் வழிபாடு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
சுப பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியுடன் செவ்வாய் பார்வையில் சேர்க்கை பெறுகிறார். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கைவிட்டுப் போனது எல்லாம் தேடி வரும். பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம்.
தொழிலை இழுத்து மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் கூட வாழ்வில் செட்டிலாக்கி விடும் வகையில் மாற்றமான நல்ல சுப பலன்கள் உண்டாகும். சொத்து தொடர்பான வழக்குகள் முடிவிற்கு வரும். வீடு, நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும்.
பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். குடும்பத்துடன் உல்லாசமாக சுற்றுலா சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள் கருத்து ஒற்றுமை அதிகமாகும். ஆரோக்கியகேடு வைத்தியத்தில் சீராகும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும். பவுர்ணமியன்று சத்திய நாராயணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






