என் மலர்tooltip icon

    துலாம்

    2025 புரட்டாசி மாத ராசிபலன்

    துலாம் ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் விரய ஸ்தானாதிபதி புதன் விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் திருப்தி கரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். அதிகப் பயணங்களால் அலைச்சலும், மன அமைதிக் குறைவும் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காத நேரம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். என்றாலும் அதுவரை மனக்குழப்பம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கிய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். குறிப்பாக தொழில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வு, ஊதியம் எதிர்பார்த்தபடி கிடைத்தல், அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் போன்றவை படிப்படியாக நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்வை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய சி்ந்தனை அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்றுக்கொள்ளும் விதம் அமையும். பிள்ளைகளின் வேலை அல்லது படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு குரு வருகிறது. 10-ல் குரு வந்தால் பதவி மாற்றம் உருவாகும் என்பது நியதி. அதற்காக பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. சகாய ஸ்தானாதிபதியான அவர் உச்சம் பெறும்பொழுது எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறை வேறும். மதிப்பும், மரியாதையும் உயரும். ஆனால் நீங்கள் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து, எப்போதும் நேர் மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

    குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் வராவிட்டாலும், வந்த மாற்றம் நல்ல மாற்றமாகவே அமையும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அந்த எண்ணமும் ஈடேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. சுக ஸ்தானாதிபதியான அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலனில் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மனக்கவலையும், விரயங்களும் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் சனிக்கிழமை விரதமும், சனீஸ்வர வழிபாடும் நன்மையைத் தரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெண்களுக்கு பிள்ளை களால் விரயம் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி யான தகவல் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 20, 26, 27, 28, அக்டோபர்: 3, 4, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    ×