என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023
அன்பும் காதல் உணர்வும் மிகுந்த துலா ராசியினரே உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 4, 5ம் இடத்திலும், ராகு பகவான் 7ம் இடத்திலும் கேது பகவான் ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். இதுவரை ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் ஆறாமிடமான ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். துலாம் ராசிக்கு 3, 6ம் அதிபதியான குரு 6ல் ஆட்சி பலம் போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
எதிரிகள் விலகுவார்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பீர்கள். உற்றார், உறவினர்கள் அல்லது தொழில், உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். உடன் பிறந்தவர்களுடன் பாகப் பிரிவினையில் முரண்பாடான கருத்துக்கள் தோன்றும். பத்திரப் பதிவு காலதாமதமாகலாம். இந்த பிரச்சனையில் தாயின் ஆதரவு உடன் பிறந்தவர்களுக்கு இருக்கும், அல்லது விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். சிலர் உடன் பிறந்தவர்களின் கடனுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். முக்கிய தேவைகளுக்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறாமல் அரசுடைமை , அரசு அங்கீகாரம் பெற்ற வங்களில் கடன் பெறுவது சிறப்பு.
உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை மிகுதியாக இருக்கும். குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். சக ஊழியர்களுடன் மனக் கசப்பு உருவாகும். சிலருக்கு விருப்பம் இல்லாத ஊருக்கு வேலை மாற்றலாகும். அரசு ஊழியர்கள் இந்த ஓராண்டு காலம்கொடுக்கப்பட்ட வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முதலாளிகளுக்கு புதிய தொழில் முதலீடுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் விலகலாம். 7ல் ராகு இருப்பதால் நல்ல தொழில் திறமையும், அனுபவமும் நிறைந்த நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் விலகலாம். வெளிப்பார்வைக்கு அனுபவம்மிகுந்தவர் போலவும் தொழில் தந்திரம் தெரியாத புதிய கூட்டாளியுடன் நட்பு ஏற்படலாம்.
யாரையும் நம்பி பணம் சம்பந்தபட்ட விஷயங்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. தன விரயம் மிகுதியாக இருக்கும் என்பதால் எந்த விசயத்தையும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பழக்கமில்லாத அறிமுகமில்லாத நபர்களுக்கு கடன் கொடுப்பதையும், கடன் பெறுவதையும் தவிர்க்க வேண்டும். அலைச்சல் அதிகரிக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.அமைதியாக நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டால் இந்த ஒரு வருட காலத்தை எளிதில் கடக்க முடியும். சிலர் உயில் எழுதலாம் அல்லது எழுதிய உயிலில் திருத்தம் செய்யலாம். 6ல் குரு ஊரில் பகை என்ற பழமொழி இருந்தாலும் குருவின்பார்வையால் தொழில் ஸ்தானம் , விரய ஸ்தானம் . தன ஸ்தானம் பலம் பெறும். அபரிமிதமான சுப பலன்கள் உண்டு.
குருவின் 5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 10ம்மிடமான கர்ம ஸ்தானத்தில் பதிகிறது. வாரிசு இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். 10ம்மிடம் தொழில் ஸ்தானம் என்பதால் ஏற்கனவே வியாபாரத்தில் உள்ளவர்கள் தொழிலை விரிவு செய்ய புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். அதற்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும்.பரம்பரை குலத்தொழில் செய்பவர்கள் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். தீட்டிய திட்டம் வெற்றி பெற திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டியாளர்கள் விலகுவார்கள். புதிய பாதை புலப்படும்.
17.1.2023 வரை ராசி, 6, 10ம் இடத்திற்கு சனிப் பார்வை உள்ளது. ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் உள்ளார் பல புதிய தொழில் ஆர்வலர்கள் உருவாகுவார்கள். நன்கு பரிட்சயமான தொழிலை மட்டும்செய்யவும். புதியதடாலடியான முடிவுகள் எடுக்க கூடாது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை இழந்தவர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் சந்தர்ப்பம் உண்டாகும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலர் அதிக சம்பளத்திற்கு புதிய வேலையில் சேரலாம். சிலருக்கு ஓய்வு பெற்ற தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும்.
குருவின் 7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிவதால் சிலர் வாழ்நாள் முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சிக்கு வெளிநாட்டிற்கு செல்லலாம். சிலர் ஒர்க் பிரம் ஹோமில் வெளிநாட்டு வேலை செய்யலாம். தம்பதிகள் உத்தியோகத்திற்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லலாம். எதிலும் நிதானத்துடன் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம்.நம்பியவர்களே எதிரியாக, துரோகியாக மாறும் வாய்ப்பு உள்ளதால் அதீத விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முயற்சிகள் கால தாமதமாக பலிதமாகும்.சிலருக்கு வீடு கட்டும் வாய்ப்பு அல்லது வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழைய வீட்டை புதிப்பிக்கலாம். சிலருக்கு நின்று போன வீடு கட்டும் பணி தொடரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். சிலர் கண் அல்லது மூட்டு அறுவை சிகிச்சை செய்யலாம்.
சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் வீட்டிற்கு சென்று வரலாம். சிலர் பக்தி முத்தி ஆன்மீக தொண்டு, சேவை செய்யலாம். சிலர்கேதார்நாத், பத்ரிநாத் என ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம். சிலர் துக்கம் தாளாமல் சந்நியாசியாகலாம். சிலர் கடனுக்காக தலை மறைவாகலாம். எது எப்படி இருந்தாலும் நிம்மதியான தூக்கம் வரும்.
குருவின் 9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் எவ்வளவு இழுபறியான நிலை இருந்தால் கூட குடும்ப உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். இதுவரை எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தவர்கள் கூட வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தந்தை, தாயின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தாய், தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உற்றார், உறவுகள் சுப விசேஷங்கள் என குதூகலம் நிரம்பி இருக்கும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் பகை மறப்பார்கள். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகள் சம்பாத்தியத்தால் தலை நிமிரும்.சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டு ஆன்லைனில் இன்னொரு வருமானம் ஈட்டலாம்.இல்லை என்ற நிலை இருக்காது.புதிய உறவுகளான மருமகள், மருமகன் கிடைக்கப் பெறுவீர்கள்.
குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை
குரு பகவான் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் நிறைந்த தன லாபம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். சிலருக்கு விரும்பிய ஊருக்கு பணி மாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். எப்பொழுதோ வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். இட விற்பனையில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். கடன் தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். அரை குறையாக நின்ற பணிகள் துரிதமாகும். எதிர் காலம் பற்றிய கவலைகள் அகலும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட எல்லைத் தகராறு சுமுகமாகும்.
பெண்கள்:6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும். பற்றாக்குறை பட்ஜெட்டை உபரி பட்ஜெட்டாக மாறும்படி குடும்பத்தை நிர்வகிப்பீர்கள்.பணிபுரியும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சக்ரத் தாழ்வாரை வழிபட கடன், எதிரி தொல்லை குறையும். நோய்கள் அண் டாது.வெள்ளிக்கிழமை குத்து விளக்கு ஏற்றி லலிதா சகஸ்ஹர நாமம் படிக்க பொருள் வரவு அதிகமாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
சுபகிருது வருட பலன் - 2023
ஆடம்பர வாழ்வில் நாட்டம் மிகுந்த துலா ராசியினருக்கு தமிழ் புத்தாண்டில் சுப பலன்கள் அதிகரிக்க நல் வாழ்த்துக்கள்.
ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் 6ம் இடத்திலும் சனி பகவான் 4, 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்கள். ராசியில் உள்ள கேதுவால் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். 7ல்ராகு நிற்பதால் வெகு சிலருக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகும். நட்பு வட்டாரங்களால் மன சங்கடம் உருவாகும்.
ஆறாம் அதிபதியாகிய குரு மறைவு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பய உணர்வு அனைவருக்கும் இருக்கும். இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. சில வளர்ச்சிகள் தடைபடலாம். ஆனால் குரு பார்வை பட்ட இடத்தின் மூலம் நன்மைகள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. 4ம்மிட சனி பகவானால் சுக போக பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
குடும்பம்:இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அனுசரித்துச் செல்வார்கள். மன நிம்மதி இருக்கும். வீட்டில் எல்லோரும் எப்போதும்சந்தோசமாக இருப்பார்கள்.குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும். முன்னோர்கள் சொத்தைப் பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்தசொத்துகள் உங்களுக்கு சாதகமாகப் பிரிக்கப்படும்.தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. 3,6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீடு மாற்றம் செய்ய நேரும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்யக் கூடும்.
ஆரோக்கியம்:6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய நேரும்.ஞாபக சக்தி குறையும். மறதி ஏற்படலாம்.
மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்யும் நேரம்.
திருமணம்:துலாம் ராசியினருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணமே வேண்டாம் என்றவர்கள் கூட திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். 7ல் உள்ளராகு சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தி இருப்பதால் சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறும். சிலருக்கு ராகு மேஷத்தை கடக்கும் முன்பு ஒன்றுக்குமேற்பட்ட திருமணம் நடக்கும்.
பெண்கள்:ஜனன கால ஜாதகப்படி தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு ராகு/கேதுக்களால் சிறு சிறு உடல் பாதிப்பு மனசஞ்சலம் இருக்கும். மற்றவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் தொடர்ந்து சுபநிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வருகையில் குதுகலம் நிரம்பியிருக்கும். தாய் வழிப்பாட்டியின் நகைகள், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு வலுவாக இருக்கும்.
மாணவர்கள்:லக்னத்தில் உள்ள கேது கற்றல் ஞானத்தை மிகைப்படுத்துவார். உழைப்பிற்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கும். சில மாணவர்களுக்கு வேற்று மொழி கற்கும் வாய்ப்பும் ஆர்வமும் உண்டாகும். 6ல் குரு ஆட்சி பெறும் காலத்தில் போட்டித் தேர்வில் பெற்றி பெற்று பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்:அரசு உழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இட மாற்றத்துடன் ஊதிய உயர்வும் கிடைக்கும்.தனியார் துறையினர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு மாறலாம். 6ல் குரு ஆட்சி பலம் பெறுவதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்:தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும்.தன வரவு மகிழ்வை தரும். லாபம் ஒன்றுக்கு இரண்டாகும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். பல புதிய தொழில் அதிபர்கள் உருவாகுவார்கள். சில உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களுக்கு டிரேட் மார்க் வாங்குவார்கள். சிலருக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:ஏழில் உள்ள ராகு பொது ஜனத் தொடர்பை அதிகப்படுத்தும். மக்களுடன் மக்களாக கலந்து சேவை செய்வீர்கள். அரசியல்வாதி களுக்கு மிகப் பொன்னான காலம்.6ல் குரு ஆட்சிபெறும் காலத்தில் எதிரிகள் விலகுவார்கள். உங்களின் புகழ் பரவும். யாரும் உங்களை அசைக்க முடியாது.
கலைஞர்கள்:சுக்ரனை ராசி அதிபதியாகக் கொண்ட கலைத்துறையினர் சாதனை படைப்பீர்கள். புதிய படைப்புகள் உலகப் புகழ் பெறும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். 6ல் குரு ஆட்சி பெறும் காலத்தில் கடன் வாங்கி படம் எடுப்பதை தவிர்க்கவும். கலைத்துறையின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள்.
விவசாயிகள்: எதிர்மறை எண்ணங்கள் விலகும். கடன் வாங்கி வயல் தோட்டம் வாங்குவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பால் தரமான பொருட்களை விளைவிப்பீர்கள்.உங்களின் உழைப்பிற்கு அபரிமிதமான பலன் கிடைக்கும். உங்கள் விலை பொருட்களுக்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கும்.
ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராசியில் கேதுவும் ஏழில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள்.சில தம்பதிகளுக்குள் ஈகோ பிரச்சனை ஆரம்பமாகும். அதனால் கருத்து வேறுபாடு சற்று மிகைப்படுத்தலாக உருவெடுக்கும்.சில தம்பதிகளுக்கு மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் பிரிவினை உண்டாகும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். வாழ்க்கைத் துணை மூலம் அதிகப்படியான பொருள் வரவு உண்டாகும்.
குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 4ல் சஞ்சரிக்கும்சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில்தாய் வழி உறவுகளின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். தாய் வழிப் பூர்வீகச் சொத்துப் பிரிப்பதில் கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது நீதி மன்றத்தில் வழக்கு பதியலாம். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் கை நழுவிப்போகலாம். செவித்திறன் குறைதல், சீழ்வடிதல்போன்ற காது தொடர்பான நோய் பாதிப்பு தோன்றி மறையும். நரம்பு, வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும் என்பதால் கவனம் தேவை.
பரிகாரம்:வெள்ளிக்கிழமை காலை 6 --7 சுக்ர ஓரையில் மல்லிகை மலர் அணிவித்து மகாலட்சுமியை வழிபட சீரான முன்னேற்றம் உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும்
6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் விரும்பிய கடன் தொகை எளிதில் கிடைக்கும்.ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் வரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும்.சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக பிள்ளை இல்லாதவர்களின் உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இன்றைய ராசிப்பலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். பழைய வாகனங்களை மாற்றி புதியவாகனங்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.






