என் மலர்
சிம்மம்
புத்தாண்டு ராசிபலன்கள்-2024
ஆளுமைத் திறன் நிறைந்த சிம்ம ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தப் புத்தாண்டு துவக்கத்தில் குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் நின்று ராசியைப் பார்க்கிறார். ஏப்ரல் 21 முதல் தொழில் ஸ்தானம் செல்கிறார். ராகு பகவான் அஷ்ட ஸ்தானத்திலும் கேது பகவான் தன ஸ்தானத்திலும் நிற்கிறார்கள். சனி பகவான் ராசிக்கு ஏழில் சப்தம ஸ்தானத்தில் நின்று கண்டகச் சனியாக செயல்படுகிறார். சனி ராகு, கேதுக்களின் சஞ்சாரம் சற்று சுமாராக இருந்தாலும் குரு பார்வை படும் இடங்களால் எத்தனை இடர் வந்தாலும் சமாளிக்க முடியும். தொட்டது துலங்கும். பட்டது பூக்கும்.
குருவின் சஞ்சார பலன்கள்
ஏப்ரல் 21, 2024 வரை பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் குருபகவான் புத்திர பிராப்தம் குல விருத்தி, உயர் கல்வி யோகம், வெளிநாட்டு உத்தியோகம், அரசு உத்தியோகம், புண்ணிய காரியம் செய்யும் வாய்ப்பு என சுப பலன்களை வாரி வழங்குவார். ஏப்ரல் 21-க்குப் பிறகு தொழில் ஸ்தானத்திற்குச் செல்கிறார். குருவின் 5-ம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும், 7-ம் பார்வை சுக ஸ்தானத்திலும் 9-ம் பார்வை ருண, ரோக ஸ்தானத்திலும் பதிகிறது. பேச்சுத் திறமை கூடும். அரிவாற்றலால் சாதுர்யமாக செயல்படுவீர்கள். இதனால் குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு மிகுதியாகும்.
குடும்பத்தில் விருந்துகள், விழாக்கள், விசேஷங்கள் என மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் நிலவிய மந்த நிலை மாறும். வீடு, வாகன யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் வசதித்தவர்கள் புதிய வீடு வாங்குதல், கட்டுதல், பராமரித்தல் என சுப பலன்கள் கூடும். தேக சுகம் கூடும். பழைய கடன்களை அடைக்கலாம். புதிய கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தலாம். விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையான சம்பவங்கள் நடைபெறும்.குருவின் அருளால் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவீர்கள். அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள்.
சனியின் சஞ்சார பலன்கள்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு முழுவதும் ராசிக்கு 7-ல் நின்று கண்டகச் சனியாக செயலாற்றுகிறார். தனது 3-ம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் ராசியையும் 10-ம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி பகவான் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் செல்வாக்கு அந்தஸ்து யாவும் உயரும். நினைத்ததை அடைய முடியும். உங்களுக்குள் வேகமும் தைரியமும் கூடும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
இந்த புத்தாண்டில் எதிர்பார்த்த பதவியை அடைய முடியும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். பூர்வீகச் சொத்தில் நிலவிய இழுபறி நிலை மாறும். பெற்றோர்களின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை பராமரிப்புச் செலவு அதிகமாகும். வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். எண்ணங்கள் நிறைவேறும் காலம்.ராசியை சனி பகவான் பார்ப்பதால் கண்டகச் சனியின் பாதிப்பால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்
2024 புத்தாண்டு முழுவதும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் நிற்கிறார்கள். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். தொழில் சீரான சிறப்பான முன்னேற்றம் உண்டு.பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களுக்கும் மிக மிக சாதகமான காலம். சிலருக்கு விபரீத அதிர்ஷ்ட யோகமான உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.எதிரிகளிடம் இருந்து வந்த போட்டி பொறாமைகள் மறையும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும்.சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்.கெட்டவன் ராகு மறைவு ஸ்தானத்தில் நிற்பதால் சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். எனினும் முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது.
மகம்
புத்திக் கூர்மையுடன் புதிய திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சியும், சந்தோஷமும் தொடரும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு கரு உருவாகும்.பிள்ளைகளால் பெருமையும் நன்மையும் உண்டாகும்.எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.வீடு வாகன செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும்.திருமணம் கூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். நோய் நொடி சீராகும். சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபடவும்.
பூரம்
புதிய அனுபவம் உண்டாகும். உங்களை தவறாகப் புரிந்து கொண்ட உறவினர்கள், தவறை உணர்ந்து உறவு பாராட்டுவார்கள். தம்பதிகளிடம் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக் கூடும்.வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்பனை செய்து, புதிய வீடு, மனை வாங்குவீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு ஆறுதலாக இருக்கும்.பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சல் மிகுந்த பிரயாணத்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு ஏமாறாதீர்கள். சங்கடஹர சதுர்த்தியன்று தேன் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.
உத்தரம் 1
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த பணிகள் முடியும்.கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும்.
திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம் போன்ற எல்லாவிதமான நன்மைகளையும் இக்காலத்தில் அடைய முடியும்.சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். மருத்துவ உதவியால் உடல் நிலை தேறும். பிரதோஷ காலங்களில் நந்தியம் பெருமானை வழிபடவும்.
திருமணம்
திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். கண்டகச் சனிக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் கேதுவும் அவமானம், வம்பு, வழக்கு, விபத்து, கண்டம், சர்ஜரி பற்றிக் கூறும் எட்டாமிடத்தில் ராகுவும் நிற்பதால் சுய ஜாதகத்தில் ராகு புத்தி, கேது புத்தி சனி புத்தி நடப்பவர்கள் அவசியம் சுய ஜாதகத்தை சரிபார்த்து திருமணம் நடத்த வேண்டும்.
பெண்கள்
பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலைப்பளு பொறுப்புகள் அதிகரிக்கும். எட்டாமிடம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் சிம்ம ராசிப் பெண்கள் எட்டாமிடத்தை ராகு கடக்கும் வரை செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை மற்றும் காளியை வழிபட வேண்டும்.தாய்வழி வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் ராகு கத்தரி, கேது ஊசி.
ராகு கேதுவின் வெட்டுதல், தைத்தல் தொழிலை செய்பவர்களுக்கு தொழில் கொடி கட்டி பறக்கும். தறி ஓட்டுபவர்கள், கயிறு திரிப்பவர், டெக்ஸ்டைல் தொழில், மருத்துவர்கள் போன்றவர்களுக்கு பொன்னான நேரம். பூமி தொடர்பான ரியல் எஸ்டேட் கட்டுமானப் பணி, சுரங்கத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இவர்களுக்கு அரசின் சலுகைகள், மானியங்கள் எளிதில் கிடைக்கும். கண்டகச் சனியின் காலம் என்பதால் கூட்டுத் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள்
ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு , ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும்.
அரசியல்வாதிகள்
எட்டாமிடம் என்பது அதிர்ஷ்டம் பற்றிக் கூறுமிடம் என்பதால் அரசியல் பிரமுகர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. அதே நேரத்தில் 2-ல் கேது இருப்ப தால் இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதி கொடுத்தால் பின்நாட்களில் அவஸ்தையை சந்திக்க நேரும்.
பரிகாரம்
வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் கோதுமை அல்வா வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட குலதெய்வம், சிவனை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.






