என் மலர்
சிம்மம்
வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை
5.1.2025 முதல் 11.1.2025 வரை
அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சூரியனும் தன, லாப அதிபதி புதனும் சேர்க்கை பெறுவதால் பண வரவு பல வழிகளில் உருவாகும்.பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும். சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும். சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுபச் செலவுகள் செய்ய நேரும். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.
பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள். விரைவில் அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. 5.1.2025 அன்று மதியம் 2.36 முதல் 7.1.2025 மாலை 5.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406