என் மலர்
சிம்மம்
வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
தெளிவான திட்டமிடுதலும் முயற்சியும் அவசியம். ராசி அதிபதி சூரியன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்ந்துள்ளார். தம்பதிகளின் அன்பு பரிமாற்றம் மன நிறைவாக இருக்கும். ஆரோக்கிய குறைபாடு அகன்று மருத்துவச் செலவு குறையும். சிலர் நல்ல வசதியான வீட்டிற்கு இடமாற்றம் செய்யலாம். விரய ஸ்தானத்தில் குருபகவான் உச்சம் அடைவது சுபித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல.
கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம். வியாபாரத்தில் சிறு சறுக்கல் தோன்றுவது போல் இருந்தாலும் சமாளிக்க முடியும். திருமணத் தடை நீடிக்கும். தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். தந்தை-மகன் உறவு பலப்படும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வருகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
6.10.2025 அன்று காைல 12.45 முதல் 8.10.2025 அன்று காைல 1.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு கை,கால், மூட்டுஎலும்பு, நரம்பு, சுகர், பிரஷர் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் சகல சௌபாக்கியமும் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






