என் மலர்tooltip icon

    சிம்மம்

    வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை

    14.12.2025 முதல் 20.12.2025 வரை

    சிம்மம்

    அரசு வகை அனுகூலம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். குலதெய்வ நல்லாசிகள் கிட்டும். ஆன்ம பலம் பெருகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் மிகுந்த ஆதாயத்தை ஏற்படுத்தித் தரும். புத்திர பிரார்த்தம் உண்டாகும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு உருவாகும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிறரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் கவனமாகவும் இருப்பது நல்லது. சிலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம்.

    உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். குரு பகவான் வக்ர நிவர்த்தி பெறும் போது எதையும் சமாளிக்கும் தைரியத்தையும் தெம்பையும் வழங்குவார். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×