என் மலர்tooltip icon

    சிம்மம்

    2024 மார்கழி மாத ராசிபலன்

    மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 7-ல் சனியும், 10-ல் குருவும் இருப்பதால் புதிய திருப்பங்களும், நல்ல மாற்றங்களும் வரும் மாதம் இது.

    வியாபார விருத்தி, கணிசமான லாபம் கைகளில் புரளுதல், குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாதல், உத்தியோகத்தில் உயர்வு போன்றவை படிப்படியாக நடைபெறும். தன - லாபாதிபதி புதனை, குரு பகவான் பார்ப்பதால் சென்ற மாதத்தைக் காட்டிலும் பொருளாதாரம் திருப்திகரமாக வந்து மனதை மகிழ்விக்கும்.

    செவ்வாய்- சுக்ரன் பார்வை

    கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வெற்றிகள் ஸ்தானாதிபதியான சுக்ரனைப் பார்க்கும்போது, வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். கும்பத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுதும் செவ்வாயின் பார்வை பதிகிறது. எனவே இம்மாதம் முழுவதும் மகிழ்ச்சிக்குரிய தகவல் ஏராளமாக வரலாம்.

    வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று ஆர்வம் கொண்டவர்களுக்கு அது கைகூடும். தொழிலில் கூட்டாளிகள், புதியவர்கள் வந்திணையலாம். நிறுத்தி வைக்கப்பட்ட தொழிலை மீண்டும் நடத்தும் முயற்சி கைகூடும்.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியாக விளங்குபவர், குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால் பூர்வ புண்ணியத்தின் வலிமை கொஞ்சம் குறையும். எனவே பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடைபெறாமல் போகலாம். அண்ணன், தம்பிகளுக்குள் அரசல், புரசல்கள் ஏற்படும். வருமானத் தடை அதிகரிக்கும்.

    'எதையும் திட்டமிட்டு செய்ய முடியவில்லையே' என்று கவலைப் படுவீர்கள். அரசு வழிப் பிரச்சினைக்கு கூட ஆளாக நேரிடும். எதையும் சமாளிக்கும் திறமை உங்களிடம் இருந்தாலும் கூட இதுபோன்ற காலத்தில் அலுப்பும், சலிப்பும் அதிகரிக்கும்.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு செல்வது யோகமான நேரம்தான். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வருமானம் உயரும். உறவினர்களும், உடன்பிறப்புகளும் எதிர்பார்த்த உதவிகளைச் செய்வர். நகை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் குறுக்கீடுகள் அகலும். உங்களது அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். திருமணத் தடை அகலும். தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரம் செய்யும் இடத்தை மாற்றியமைக்க முற்படுவீர்கள். ஸ்தம்பித்து நின்ற பணிகள் மீண்டும் தொடரும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். கலைஞர்களுக்கு பிரபலஸ்தர்களின் தொடர்பு நன்மை தரும். மாணவ - மாணவி களுக்குப் படிப்பில் கூடுதல் கவனமும், அக்கறையும் செலுத்துவது நல்லது. பெண்கள் குடும்பப் பிரச்சினையை மூன்றாம் நபரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 17, 23, 24, 27, 28, 29, ஜனவரி: 8, 9, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    ×