என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2025
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்களைச் சந்திக்க வரலாம். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2025
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலன் கருதி மருத்துவ செலவுகளைச் செய்ய நேரிடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்-15 செப்டம்பர் 2025
தேசப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்-14 செப்டம்பர் 2025
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்-13 செப்டம்பர் 2025
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்-12 செப்டம்பர் 2025
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2025
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு புதிய திட்டம் தீட்டுவீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2025
அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2025
எடுத்த முயற்சி பலன் தரும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். சகோதர வழியில் விரயங்கள் ஏற்படும். வாகன மாற்றம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2025
கல்யாண முயற்சி கைகூடும் நாள். வரவு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.






