என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்- 11 அக்டோபர் 2025
யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்- 10 அக்டோபர் 2025
வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்கும் என்று நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கும். ஆன்மிகப் பயணம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்- 9 அக்டோபர் 2025
நினைத்தது நிறைவேறும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2025
யோகமான நாள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 7 அக்டோபர் 2025
கவலைகள் தீரக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். வரவைவிடச் செலவு கூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்- 6 அக்டோபர் 2025
மனக்குழப்பம் ஏற்படும் நாள். கூட்டாளிகளால் பிரச்சனை உண்டு. காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்- 5 அக்டோபர் 2025
யோகமான நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்- 4 அக்டோபர் 2025
தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். கனிவாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்- 3 அக்டோபர் 2025
பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்-02 அக்டோபர் 2025
தேசப்பற்று மிக்கவர்களால் திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2025
கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2025
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.






