என் மலர்tooltip icon

    மிதுனம்

    வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை

    5.10.2025 முதல் 11.10.2025 வரை

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தான தர்மங்களில் ஆர்வங்கள் கூடும். பூர்வீகம் சார்ந்த இன்னல்கள் சீராகும். விற்க முடியாமல் கிடந்த பூர்வீக சொத்துக்கள் விற்றுப் பணமாகும்.

    தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும். குரு பகவான் அதிசாரமாக தன ஸ்தானத்திற்கு செல்வதால் ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். புதிய திட்டங்கள் மற்றும் எண்ணங்களால் தொழிலில் முன்னேற்றம், லாபம் உருவாகும். தொழிலுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சிகள் பலன்தரும்.

    அடகு நகைகளை மீட்கக்கூடிய வகையில் வருமானம் உயரும். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் அன்பு மன சஞ்சலத்தைக் குறைக்கும். தேவைகள் நிறைவேறும். வீடு மற்றும் பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். வராக்கடனை வசூலிப்பதில் ஆர்வம் கூடும். மீனாட்சியம்மன் வழிபாட்டால் சாதகமான பலன்களை பெற முடியும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×